விரைவில் வெளியாகிறது 'பொம்மை'

விரைவில் வெளியாகிறது 'பொம்மை'

1 mins read
44b97fa6-5eac-4f52-b03b-a86743de12ad
'பொம்மை' படத்தில் இடம்பெறும் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர். -

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ளது 'பொம்மை'.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.

ராதா மோகன் இயக்கும் படம் என்பதால் கோடம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை ரசிகர்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் சுவரொட்டியை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

"இது சைக்கோவைப் போன்ற குணாதிசயம் கொண்ட இளைஞன் எதிர்கொள்ளும் அனுபவங்களை விவரிக்கும் திகில் படமாக உருவாகி உள்ளது. வழக்கம்போல் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

"முதல்தோற்ற சுவரொட்டியில் அவர் ஒரு பொம்மையைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது," என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

'பொம்மை' விரைவில் வெளியாகிறது.