திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
950fd3d3-facb-4e3a-8965-7e06674c5cd0
-
multi-img1 of 2

நன்றி தெரிவித்தார் அனுஷ்கா

கடந்த 16 ஆண்டுகளாக தாம் திரையுலகில் நீடித்து வருவதாகவும் இதற்கு ரசிகர்களின் ஆதரவே காரணம் என்றும் கூறியுள்ளார் அனுஷ்கா.

தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அண்மைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. தங்கள் நேரத்தை செலவு செய்து எனது வாழ்க்கையில் வித்தியாசங்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. என் மீது அன்பு காட்டுபவர்களுக்கும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்று கூறியுள்ளார் அனுஷ்கா.

பதிலடி கொடுத்த பிரியா வாரியர்

அண்மையில் தனது நட்பு வட்டத்தில் உள்ள சிலருடன் சேர்ந்து ரஷ்யா சென்று வந்துள்ளார் பிரியா வாரியர். இது தொடர்பான புகைப் படங்கள், காணொளிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர், அவரது புகைப்படங்களை வைத்து தப்பும் தவறுமாக சில தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் சாடியுள்ளார்.

"என் நண்பர்களுடன் பயணித்த அனுபவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளேன். ஆனால் அதன் பின்னணியை ஆராயாமல் சமூக வலைத்தளங்களில் சிலர் முட்டாள்தனமாக கருத்து தெரிவித்துள்ளனர். "நான் எப்படி வாழ்கிறேன், நண்பர்களுடன் எப்படி இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனது சொந்த விஷயம். எனவே உங்கள் கருத்துகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்று பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.