கோபத்தின் உச்சத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’

'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தின் முதல்தோற்­றச் சுவ­ரொட்டி கோடம்­பாக்­கத்­தில் மட்­டு­மல்ல, தமி­ழக அர­சி­யல் களத்­தி­லும் பர­ப­ரப்­பை­யும் சூடான விவா­தங்­க­ளை­யும் எழுப்பி உள்­ளது.

பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் சூர்யா நாய­க­னாக நடிக்­கும் படம் இது. அவ­ரது நாற்­ப­தா­வது படம் என்ப தால் திரைக்­கதையில் தீவிர கவ­னம் செலுத்தியுள்­ளார் பாண்டி­ராஜ்.

இது தமி­ழ­கத்­தின் பொள்­ளாச்சி பகு­தி­யில் நிகழ்ந்த உண்­மைச் சம்­பவத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வா­கும் படம் என்று கசிந்த தக­வல்­தான் சில தரப்­பி­ன­ருக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்ளதாம்.

"பொள்­ளாச்சி என்­ற­துமே அங்கு பல இளம்­பெண்­கள் சீர­ழிக்­கப்­பட்ட விவ­கா­ரம்­தான் நினை­வு­க்கு வரும். அது தொடர்­பாக வெளி­வந்த ஒலி, ஒளிப்­ப­தி­வு­களைக் கேட்­ட­வர்­களை­யும் பார்த்­த­வர்­க­ளை­யும் பத­ற­வும் கோபப்­ப­ட­வும் வைத்­தன.

"அந்த விவ­கா­ரத்­து­டன் வேறு சில விஷ­யங்­க­ளை­யும் சரிவிகி­தத்­தில் கலந்து திரைக்­க­தையை அமைத்­துள்­ளார் பாண்­டி­ராஜ் எனத் தக­வல்.

"உண்மை எப்­போ­தும் வெளியே வந்த செய்­தி­களைவிட பயங்­க­ர­மா­ன­தாக இருக்­கும் என்­பார்­கள். அது­போ­லவே 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் பொள்­ளாச்சி சம்­பவத்தைக் கையாண்­டுள்­ளார் பாண்டிராஜ். அவர் எவ்­வாறு கதை சொல்­வார் என்­பது தெரிந்த விஷ­யம்.

"கடைக்­கோடி சாமா­னி­ய­னுக்­கும் தமது படங்­களும் அவற்­றில் சொல்­லப்­படும் கருத்­து­களும் சென்ற­டைய வேண்­டும் என விரும்பு­வார்.

"தனக்கே உரிய முறை­யில் எளிமை­யா­க­வும், அதே சம­யம் அதி­ர­டி­யா­க­வும் பொள்­ளாச்சி சம்­பவத்தை விவ­ரிக்­கப் போகி­றார் பாண்­டி­ராஜ் என்­ற­தும் ஒரு தரப்­பினர் அதற்கு எதி­ரா­கக் கள­மிறங்க தயா­ரா­கி­றார்­கள்," என்­கின்­ற­னர் கோடம்­பாக்­கத்து விவ­ரப்புள்­ளி­கள்.

இதற்­கேற்ப 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தின் முன்­னோட்டக் காட்சித் தொகுப்­பும் அதி­ர­டி­யாக உள்­ளது. அதில் உய­ர­மான வாளை தூக்­கிக்­கொண்டு மிகுந்த கோபத்­தோடு காட்சி அளிக்­கி­றார் சூர்யா. அவ­ரது இந்த தோற்­றம் இளை­யர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது.

தனி­மை­யான பகு­தி­யில் உள்ள ஒரு பாழ­டைந்த பங்­க­ளா­வில் ஏரா­ள­மான இளை­ஞர்­கள் தலை குப்­பு­றக் கிடக்க, அவர்­களில் ஒரு­வ­னு­டைய காலைப் பற்றி இழுத்­துக்­கொண்டு வரும் சூர்யா கடும் கோபத்­தில் இருக்­கி­றார். அதற்கு அவர் கேள்­விப்­பட்ட பாலி­யல் கொடு­மை­தான் கார­ணம் என ரசி­கர்­கள் யூகிக்­கின்­ற­னர்.

"'சூர­ரைப் போற்று' வெற்­றியை அடுத்து மற்­றொரு வெற்­றிக்­குத் தயா­ராகி வரு­கி­றார் சூர்யா. பாண்டி­ராஜ் இயக்­கத்­தில் உரு­வான 'கடைக்­குட்டி சிங்­கம்' படத்­தில் கார்த்தி அடைந்­தது மிகப்­பெ­ரிய உய­ரம்.

"அதே ­போல சூர்­யா­வுக்கு ஒரு வெற்­றிப் படத்தை அளிப்­பார் பாண்டிராஜ். அதற்கு அண்­மை­யில் வெளி­யான முன்­னோட்டக் காட்சித் தொகுப்­பு­தான் சாட்சி," என்­கி­றார்­கள் சூர்­யா­வின் ரசி­கர்­கள்.

'எதற்கும் துணிந்தவன்' என்ற தலைப்பில் ஏற்கெனவே கடந்த 1976ஆம் ஆண்டு தமிழில் ஒரு படம் வெளியாகி உள்ளது. அதில் சூர்யாவின் தந்தை சிவகுமார்தான் நாயகன். இப்போது அதே தலைப்பில் சூர்யா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!