ஷிரின்: தமிழகம் என் இரண்டாவது தாய் வீடு

'நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு ஓடு ராஜா' திரைப்­ப­டத்­தின் மூலம் கோடம்­பாக்­கத்­தில் கால்­ப­தித்­த­வர் ஷிரின் காஞ்ச்­வாலா. அதன் பிறகு வேறு எந்­தப் படத்­தி­லும் காண­வில்லை.

இடை­யில் தெலுங்­குப் படங்­களில் நடிப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில் மீண்­டும் தமிழ்ப் படங்­களில் நடிக்­கி­றார் ஷிரின். அவர் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'டிக்­கி­லோனா', 'மஞ்­சள் குடை' ஆகிய இரு படங்­களும் அடுத்­த­டுத்து வெளி­யீடு காணத் தயா­ராக உள்­ளன.

"நான் சினி­மா­வுக்கு வந்து மூன்று ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. வாய்ப்­பு­க­ளைத் தேடிச் செல்­வது எனக்­குப் பிடிக்­காது. நல்ல கதை­கள் தேடி வரும்­போது ஏற்­றுக் கொள்­கி­றேன்.

"கொரோனா ஊர­டங்­கின்­போது ஏரா­ள­மான தமிழ்ப் படங்­கள் பார்த்­து­விட்­டேன். தமிழ்ப் படங்­களில் கதை நக­ரும் விதம், குடும்ப உணர்­வு­கள், சண்­டைக்­காட்சி, இறு­திக்­காட்­சி­கள் எல்­லாம் படத்­துக்­குப் படம் நன்கு மாறு­படும். ஒவ்வோர் அம்­சத்­தை­யும் வித்­தி­யா­ச­மாக வெளிப்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்று சொல்­லும் ஷிரின், வட இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர் என்­றா­லும் தமி­ழ­கம் தமது இரண்­டா­வது தாய் வீடு என்­கி­றார்.

சென்­னை­யைப் போன்ற அழ­கான நக­ரத்தை உல­கில் வேறு எங்­கும் பார்க்க முடி­யாது என்­றும் தொடர்ந்து சென்­னை­யி­லேயே தங்கி இருப்­ப­து­தான் தமது ஆசை என்­றும் சொல்­கி­றார்.

"இப்­போது மும்­பை­யில் உள்­ளேன். மீண்­டும் எப்­போது படப்­பி­டிப்பு தொடங்­கும், எப்­போது சென்­னைக்­குச் செல்­வோம் என்ற ஆர்­வம் நாளுக்கு நாள் அதி­க­ரித்­த­ ப­டியே உள்­ளது. மிக விரை­வில் கொரோனா சிக்­கல் முடி­வுக்கு வரும் என்­றும் பழை­ய­படி முழு சுதந்­தி­ர­மாக சென்­னைக்கு வந்து படப்­பி­டிப்­பில் கலந்துகொள்­வேன் என்­றும் நம்­பிக்கை உள்­ளது," என்­கி­றார் ஷிரின்.

தமிழ் சினி­மா­வில் சாதிக்க வேண்­டும் என்­ப­து­தான் இவ­ரது ஆசை­யாம்.

"தமி­ழில் வெளி­வந்த 'நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு ஓடு ராஜா', 'வால்­டர்' ஆகிய படங்­களை நண்­பர்­கள் நிறைய பேர் பார்த்­து­விட்­டுப் பாராட்­டி­னார்­கள். தென்­னிந்­தி­யப் படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு இருப்­ப­தால்தான் அவை இந்­தி­யில் மொழி­மாற்­றம் செய்­யப்­ப­டு­கிறது. அவ்­வாறு வெளி­வ­ரும் ஒரு படத்­தை­யும் விட்­டு­வைக்க மாட்­டோம்.

"ஆனால், தமிழ்ப் படங்­களில் குறிப்­பிட்­டவை மட்­டுமே மொழி­மாற்­றம் செய்­யப்­ப­டு­கின்­றன. தமிழ்ப் படங்­கள் அனைத்­தும் இந்­தி­யில் வர வேண்­டும் என ஆசைப்­ப­டு­கி­றேன்," என்று சொல்­லும் ஷிரின், அடிப்­ப­டை­யில் விமா­னப் பணிப்­பெண். கல்­லூ­ரிப் படிப்பை முடித்த கையோ­டு, இந்தியா­வில் உள்ள தனி­யார் விமான நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி உள்­ளார்.

மூன்று ஆண்­டு­கள் அந்­தப் பணி­யில் நீடித்­த­வர், பிறகு சினிமா மீதான ஆர்­வத்­தால் அந்­தப் பணி­யில் இருந்து வில­கி­விட்­டார்.

"விமா­னப் பணிப்­பெண்­ணாக இருந்த மூன்று ஆண்­டு­களும் தரை­யில் வேலையே இல்லை. வானில் பறந்­து­கொண்டே இருந்­தேன். அந்­தப் பணி பிடித்­தி­ருந்­தா­லும் சினிமா ஆசை­தான் வெற்­றி­பெற்­றது.

"சிறு வய­தில் இருந்தே சினிமா என்­றால் உயிர். அந்த ஆர்­வத்­தில்­தான் சினி­மா­வுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தேன். கன்­ன­டத்­தில் நடித்த 'விராஜ்' தான் எனது முதல் படம். அது வெளி­யான கையோடு கோடம்­பாக்­கம் என்னை அர­வ­ணைத்­தது.

"இப்­போது, வேறு எந்த மொழி­யி­லும் கவ­னம் செலுத்த முடி­யாத அள­வுக்கு அடுத்­த­டுத்து தமி­ழில் படங்­கள் அமை­கின்­றன," என்­கி­றார் ஷிரின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!