இயக்குநர் ஆகிறார் விஜய் ஆண்டனி

இயக்குநர் ஆகிறார் விஜய் ஆண்டனி

1 mins read
1c99aa9a-0995-4119-9e67-60bbd4c0014f
-

'பிச்­சைக்­கா­ரன்-2' படம் மூலம் இயக்­கு­ந­ரா­கி­றார் விஜய் ஆண்­டனி. கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்­கத்­தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்­சைக்­கா­ரன்' படம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. தெலுங்­கி­லும் வெற்றி பெற்­றதை அடுத்து, அதன் இரண்­டாம் பாகம் தயா­ரா­கிறது.

'பாரம்' படத்­துக்­காக தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்­ண­சாமி இப்­ப­டத்தை இயக்­கு­வார் என அறி­விக்­கப்­பட்­டது. பின்­னர் அவர் வில­கிக்கொள்ள, 'கோடி­யில் ஒரு­வன்' இயக்­கு­நர் ஆனந்த் கிருஷ்­ணன் இயக்­கப் போவ­தாகக் கூறி­னர். இந்­நி­லை­யில் நேற்று முன்தினம் விஜய் ஆண்­டனி பிறந்தநாளை முன்­னிட்டு 'பிச்சைக்­கா­ரன் 2' படத்­தின் இயக்­கு­நர் யார் என அறி­வித்­துள்­ள­னர். அதன்­படி விஜய் ஆண்­ட­னியே இப்­ப­டத்தை இயக்கி, இசையமைக் ­க­வும் உள்­ளார். இதற்­கான அறி­விப்பை இயக்­கு­நர் ஏ.ஆர்.முருக தாஸ் வெளி­யிட்­டுள்­ளார்.