தமிழகத்தில் திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகே 'லிப்ட்' படம் வெளியிடப்படும் என அதன் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
'பிக்பாஸ்' புகழ் கவின் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் அம்ரிதா ஐயர் நாயகியாக நடித்துள்ளார். வினித் வரபிரசாத் இயக்கி உள்ளார்.
இப்படம் திகிலும் நகைச்சுவையும் கொண்ட படமாக உருவாகி உள்ளது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீடு காணத் தயாராக உள்ளது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு 'லிப்ட்' படத்தை உடனடியாக வெளியிடப் போவதில்லை என தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் படம் நேரடியாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
"திரையரங்குகள் திறக்கப்பட்டு நூறு விழுக்காடு இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் 'லிப்ட்' படம் வெளியாகும். நேரடி யாக 'ஓடிடி' தளத்தில் வெளியிடப் படாது," எனப் படத்தை தயாரித் துள்ள லிப்ரா நிறுவனம் கூறியுள்ளது.

