தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத்திலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிக்கும் புதுப்படங்கள் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் நல்ல வசூல் காண்கின்றன.
இந்நிலையில், அண்மையில் தமது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளார் விஜய். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய்யின் ஆளுயரச் சிலை ஒன்றை அவருக்கு பரிசளித்துள்ளார்கள். அந்தச் சிலை விஜய்யை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல நிர்வாகிகள் அவருக்குப் பல்வேறு பரிசுகளை வழங்க முற்பட்டபோது, "அதெல்லாம் தேவை இல்லை," என்று மறுத்தவர், இந்தச் சிலையை மட்டும் ஏற்றுக் கொண்டதாகத் தகவல்.
இந்தச் சிலை விஜய் மக்கள் இயக்கம் செயல்படும் இடத்தில் வைக்கப்படுமா அல்லது விஜய் வீட்டை அலங்கரிக்குமா என்பது தெரியவில்லை. இந்தச் சிலை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

