‘இது சாதிக்க நினைக்கும் பெண்ணின் கதை’

ராஜா ராம­மூர்த்தி இயக்­கத்­தில் ‘அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார் அக்­‌ஷரா ஹாசன். பிர­பல பாடகி உஷா உதூப் இவ­ரது பாட்­டி­யாக நடிக்­கி­றார்.

மால்­குடி சுபா, அஞ்­சனா ஜெயப்­பி­ர­காஷ், ஜானகி சபேஷ், கலை­ராணி, ஷாலினி விஜ­ய­கு­மார் என மேலும் பல பெண்­கள் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். இப்­ப­டத்­திற்கு சுஷா இசை­ய­மைத்­துள்­ளார்

“கதைப்­படி, ஒரு கட்­டுக்­கோப்­பான குடும்­பத்­தில் பிறந்­த­வர் அக்­‌ஷரா. புத்­திக்­கூர்­மை­யு­டன் செயல்­படும் அவர், வாழ்க்­கை­யில் பல்­வேறு விஷ­யங்­களை அனு­ப­விக்க வேண்­டும், சாதிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றார். எனி­னும், குடும்ப சூழல் அவ­ருக்கு சில தடை­களை ஏற்­ப­டுத்­து­கிறது.

“இதை­ய­டுத்து தனது ஆசை­களைக் கைவிட மனம் இல்­லா­மல் தவிக்­கும் அவர், சில முடி­வு­களை எடுக்­கி­றார். அதன் வழி குடும்­பம், சமூ­கம், தனது விருப்­பங்­கள் என அனைத்­தை­யும் சமன்­ப­டுத்தி சாதிக்க முயற்சி செய்­கி­றார்.

“தன் விருப்­பப்­படி வாழ முயற்சி செய்­யும் அவர் மேற்­கொள்­ளும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை இந்­தப் படம் சுவா­ர­சி­ய­மாக விவ­ரிக்­கும்,” என்­கி­றார் இயக்­கு­நர் ராஜா ராம­மூர்த்தி.

இந்­தப் படத்­தில் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. படப்­பி­டிப்­பின்­போது எடுக்­கப்­பட்ட சில புகைப்­ப­டங்­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ள­னர்.

“அதிக படங்­களில் நடிப்­ப­தை­விட எனக்­கேற்ற ஒன்­றி­ரண்டு படங்­களில் நடித்­தால் போதும் என நினைக்­கி­றேன். ராஜா ராம­மூர்த்தி சொன்ன கதை மிக­வும் பிடித்­தி­ருந்­தது. அத­னால் மிகுந்த ஆர்­வத்­து­டன் நடிக்­கி­றேன்.

“சில கதா­பாத்­தி­ரங்­கள் நமக்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டது போன்று தோன்­றும். இந்­தப் படத்­துக்­கான கதா­பாத்­தி­ரம் என்னை அவ்­வாறு நினைக்க வைத்­துள்­ளது,” என்­கி­றார் அக்­‌ஷரா.

மிக விரைவில் இந்தப் படம் நேரடியாக இணையத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!