நாயகிகள் எடுத்த முடிவுகள்

நாயகிகள் எடுத்த முடிவுகள்

3 mins read
e89b345c-65a1-4da7-8659-255cda05cccc
-

திரை­யு­ல­கைப் பொறுத்­த­வரை பல தரு­ணங்­களில் கலை­ஞர்­கள் எடுக்­கும் சில முக்­கிய முடி­வு­கள்­தான் அவர்­க­ளு­டைய வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ண­மாக அமை­கின்­றன.

அந்த வகை­யில் மூன்று கதா­நா­ய­கி­கள் அண்­மை­யில் எடுத்­துள்ள முக்­கிய முடி­வு­கள் என்­ன­வென்று பார்ப்­போம்.

மழை சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களில் நடிப்­பது என்­றால் இளம் நாயகி நிதி அகர்­வா­லுக்கு அறவே பிடிக்­கா­தாம். அதி­லும் பாடல் காட்­சி­கள் மழை­யில் பட­மாக்­கப்­பட்­டால் வாழ்க்­கையே வெறுத்­துப் போன­து­போல் உணர்­வா­ராம்.

படப்­பி­டிப்­பின்­போது இயக்­கு­நர் தரப்­பில் எப்­ப­டி­யா­வது பல­வி­த­மா­கப் பேசி அத்­த­கைய காட்­சி­யில் தம்மை நடிக்க வைத்­து­வி­டு­வ­தா­கப் புலம்­பு­கி­றார் நிதி அகர்­வால்.

"மழை­யில் எடுக்­கப்­படும் காட்­சி­களில் நடிப்­பது எளி­தான விஷ­யம் அல்ல. முத­லில் மழை நீரில் முழு­வ­து­மாக நனைந்­து­வி­டு­வோம். ஆனால் அதன் பின்­னர் நாம் அணிந்­துள்ள ஆடை­களை உலர வைத்து, மீண்­டும் நனை­வது போன்று காட்­சி­யைப் பட­மாக்­கு­வார்­கள்.

"இதற்கு ஒத்­து­ழைப்­பது மிக­வும் கடி­ன­மான வேலை. மேலும், தண்­ணீர் பொழி­யும்­போது நம் கண்­க­ளைத் திறந்து கொண்டு நடிப்­பது சவா­லான ஒன்று. அத­னால்­தான் இது­போன்ற காட்­சி­களில் நடிப்­பது ஒரு­வித சலிப்பை ஏற்­ப­டுத்­தும். இருப்­பி­னும் காட்சி அமைப்பை மாற்ற இய­லாது என்று இயக்­கு­நர் கூறி­விட்­டால் வேறு வழி­யின்றி நடித்­து­தான் ஆக வேண்­டும்," என்­கி­றார் நிதி அகர்­வால்.

தமி­ழில் 'பூமி, ஈஸ்­வ­ரன்' ஆகிய படங்­களில் நடித்த நிதி அகர்­வால் இப்­போது தமி­ழி­லும் தெலுங்­கி­லு­மாக மூன்று படங்­களில் ஒப்­பந்­த­மாகி நடித்து வரு­கி­றார்.

*** இனி எதிர்­மறை கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­ப­தில்லை என முடிவு செய்­துள்­ளார் தமன்னா. வில்லி வேடங்­களில் நடிப்­பது தமக்கு ஒத்­து­வ­ராது என்­கி­றார். தமி­ழில் அதிக வாய்ப்­பு­கள் இல்லை என்­றா­லும் தெலுங்­கில் இவ­ருக்கு வர­வேற்பு உள்­ளது. 'சீட்டி மார்', 'மேஸ்ட்ரோ', 'எஃப்-3' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­ப­வர், இணை­யத் தொடர்­க­ளி­லும் கவ­னம் செலுத்­து­கி­றார்.

இந்­நி­லை­யில் ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மா­டக் கேட்டு பல­ரும் இவரை அணு­கி­றார்­கள். வருண்­தேஜ் நடிக்­கும் கனி என்ற படத்­தில் ஒரே ஒரு பாட­லுக்கு நட­ன­மாட ஒப்­புக்­கொண்­டுள்­ளார். இத­னால் நாய­கிக்கு உள்ள சந்தை மதிப்பு குறைந்­து­வி­டாதா? என்று கேட்­டால், அதற்கு வாய்ப்பு இல்லை என்­பதே தமன்­னா­வின் பதி­லாக உள்­ளது.

"இதற்கு முன்பு தெலுங்கு, கன்­ன­டப் படங்­கள் சில­வற்­றில் ஒரு பாட­லுக்கு மட்­டும் நட­ன­மாடி உள்­ளேன். அதன் பிற­கும் கூட பல படங்­களில் நாய­கி­யாக நடித்­தி­ருக்­கி­றேன். ரசி­கர்­க­ளுக்கு என் நட­னம் பிடித்­தி­ருப்­ப­தால்­தான் ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மாட அழைக்­கி­றார்­கள்.

"அதே­ச­ம­யம் வில்­லி­யா­க­வும் எதிர்­மறை கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடிப்­பதை மட்­டும் தவிர்க்­கி­றேன். அது­போன்ற வேடங்­களில் எனக்­குத் துளி­யும் விருப்­பம் இல்லை," என்­கி­றார் தமன்னா.

*** இந்­திப் படம் ஒன்­றில் நடிப்­ப­தற்­காக தன் உடல் எடையை வெகு­வா­கக் குறைத்­துள்ள இளம்­நா­யகி ஷாலினி பாண்டே, அந்­தப் படம் முடி­யும் வரை மீண்­டும் எடை அதி­க­ரிக்­கப் போவ­தில்லை என முடி­வெ­டுத்­துள்­ளார்.

தீவிர உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொண்டு தமது உடல் எடையை குறைத்­துள்­ளார். இத­னால் அடை­யா­ளம் காண முடி­யா­த­படி மாறி உள்­ளார்.

இந்­நி­லை­யில் தமி­ழில் உரு­வா­கும் புதுப்­ப­டத்­துக்­காக அவர் மீண்­டும் பழை­ய­படி மாற­வேண்­டும் என்­றும் அடுத்த மாதம் படப்­பி­டிப்பு தொடங்­கும் என்­றும் ஷாலி­னி­யி­டம் படத்­த­யா­ரிப்­புத் தரப்பு கூறி­ய­தா­கத் தக­வல்.

ஆனால் ஷாலி­னியோ அதற்கு வாய்ப்பு இல்லை எனத் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­ட­ராம். தாம் ஏற்­றுக்­கொண்ட இந்­திப் படத்­துக்­கான படப்­பி­டிப்பு முழு­மை­யாக முடிந்த பிறகே தமது தோற்­றத்தை மாற்றி அமைக்க முடி­யும் எனக் கூறி­யுள்­ளா­ராம்.

, :   

நிதி அகர்வால்