திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
db600988-374f-4af1-b91c-0f9b72018939
-
multi-img1 of 2

ஆர்.ஜே. பாலாஜி படத்தில் அபர்ணா

'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அபர்ணா பாலமுரளி, அடுத்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற 'பதாய் ஹோ' படத்தை தமிழில் மறுபதிப்பு செய்கின்றனர். ரூ.19 கோடி செலவில் உருவான இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் ரூ.229 கோடி வசூலித்ததாகத் தகவல். இதையடுத்து பல்வேறு மொழிகளில் மறு பதிப்பாகிறது.

தமிழ் மறுப்பதிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிப்ப தோடு படத்தை இயக்கவும் உள்ளார். அவரது ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகத் தகவல். மேலும், சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என தலைப்பு வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பள உயர்வு: ஐஸ்வர்யா விளக்கம்

அளவுக்கு அதிகமாக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படும் புகாரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார்.

தாம் ஏற்கனவே நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் தனது சம்பளம் உயர்ந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"அதற்காக எனது முதல் நோக்கமும் கவனமும் சம்பளத்தில் மட்டுமே இருப்ப தாக நினைத்துவிட வேண்டாம். நல்ல கதையாக இருந்தால் எனது சம்பளத்தை குறைத்துக்கொள்வேன். ரசிகர்கள் எனது படங்களை குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

"கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமன்றி அனைத்து முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.