விரைவில் நம்மைச் சந்திக்க வரும் 'சிப்பாய்'

விரைவில் நம்மைச் சந்திக்க வரும் 'சிப்பாய்'

1 mins read
a8529b25-4240-4916-b2cb-684a659b63f5
'சிப்பாய்' படத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன். -

கவு­தம் கார்த்­திக் நாய­க­னாக நடிக்­கும் 'சிப்­பாய்' படத்­தின் பணி­கள் மீண்­டும் தொடங்க உள்­ளன. 'சிலம்­பாட்­டம்' இயக்­கு­நர் சண்­முக சர­வ­ணன் இயக்­கத்­தில் உரு­வா­கும் படம் இது.

முதல் படத்­தில் சிம்­புவை இயக்­கிய அவர், அடுத்து கவு­த­மு­டன் கள­மி­றங்கி உள்­ளார். இப்­ப­டத்­திற்கு யுவன் ஷங்­கர் ராஜா இசை­ய­மைக்கி­றார்.

நீண்­ட­கால தயா­ரிப்­பில் உள்ள இப்­ப­டம் இடை­யில் சில பிரச்சினை­களால் நின்­று­போ­ன­தாகத் தக­வல் வெளி­யா­னது. கவுதம் கார்த்திக்கின் கால்­ஷீட் கிடைக்­கா­த­தும் தாம­தத்­துக்கு ஒரு கார­ண­மாக கூறப்­பட்­டது.

80 விழுக்­காடு படப்­பி­டிப்பு முடி­வடைந்த நிலை­யில் கொரோனா பேரிடர் கார­ண­மாக படப்­பி­டிப்பை நிறுத்தி வைத்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார் தயா­ரிப்­பா­ளர் தணி­கை­வேல். இப்­போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலை­யில் படப்­பி­டிப்பு தொடங்க உள்­ள­ன­ராம்.

திட்­ட­மிட்­ட­படி சில தினங்­களில் படப்­பி­டிப்பு நிறை­வ­டை­யும் பட்­சத்­தில் ஆண்டு இறு­திக்­குள் இப்­ப­டம் திரைகாணும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தணி­கை­வேல் ஏற்­கெ­னவே சில படங்­களை வாங்கி வெளி­யிட்­டி­ருக்­கி­றார். மேலும், 17 அனைத்­து­லக திரைப்­பட விழாக்­களில் விரு­து­கள் பெற்ற 'ஒற்றை பனை மரம்' படத்தை தயா­ரித்­த­வர்.

இயக்­கு­நர் சண்­முக சர­வ­ணன் முன்பு பல வெற்­றிப் படங்­களில் ஒளிப்­ப­தி­வா­ள­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

'சிப்­பாய்' படத்­தின் கதைக்களம் இளை­யர்­களை நிச்­ச­யம் கவ­ரும் என்­றும் கவு­தம் கார்த்­திக்கிற்கு திரையுலகில் திருப்­பு­மு­னைப் பட­மாக இது அமை­யும் என்­றும் கூறு­கிறார் சண்­முக சர­வ­ணன்.

தற்போது இணையத்திலேயே நேரடியாக படங்களை வெளியிட இயலும் என்பதால் முடங்கிக் கிடக்கும் பல படங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.