'வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை'

'வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை'

2 mins read
7b8f324a-e222-4be4-8dc2-ff783c031410
-

தாம் நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களை மிகுந்த கவ­னத்­து­டன் தேர்வு செய்­வ­தா­கச் சொல்­கி­றார் பிரி­யா­மணி.

தம்­மால் முடிந்த அள­வுக்கு அர்ப்­ப­ணிப்­பு­டன் நடிப்­ப­தா­க­வும் ஒரு திரைப்­ப­டத்­தின் வெற்றி, தோல்வி என்­பது தம் கையில் இல்லை என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் கூறி­யுள்­ளார்.

தனுஷ், மஞ்­சு­வா­ரி­யர் நடித்­தி­ருந்த 'அசு­ரன்' படத்தை தெலுங்­கில் 'நாரப்பா' என்ற தலைப்­பில் மறு பதிப்பு செய்­துள்­ள­னர். இதில் தெலுங்கு நடி­கர் வெங்­க­டேஷ் ஜோடி­யாக நடித்­துள்­ளார் பிரி­யா­மணி.

படம் நல்ல வசூல் கண்­டுள்ள நிலை­யில், விமர்­ச­கர்­கள் இவ­ரது நடிப்­பைப் பாராட்டி உள்­ள­னர். இந்­நி­லை­யில், 'அசு­ரன்' படத்­தில் மஞ்சு வாரி­ய­ரின் நடிப்பு தம்மை வெகு­வா­கக் கவர்ந்­தது எனப் பேட்டி ஒன்­றில் வெளிப்­படை­யா­கப் பாராட்டி உள்­ளார் பிரி­யா­மணி.

"வெங்­க­டேஷ் முதன்­மு­றை­யாக கிரா­மத்­துக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். இருப்­பி­னும் அவ­ரது நடிப்பு மிக அரு­மை­யாக இருந்­தது. ஏற்­கெ­னவே வெற்றி பெற்ற ஒரு படத்தை மறு­ப­திப்பு செய்­வது சவா­லான பணி.

"நம்­மு­டைய நடிப்பு ரசி­கர்­க­ளுக்­குப் பிடிக்­க­வேண்­டும் என்­பது முக்­கி­ய­மா­னது. 'நாரப்பா' படத்­தில் மஞ்சு வாரி­ய­ரின் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தால், ரசி­கர்­க­ளி­டம் பெயர் வாங்­க­மு­டி­யுமா எனும் சந்­தே­கம் எழுந்­தது. இது­கு­றித்து நீண்ட நேரம் யோசித்து, பிறகு நடிப்­பது என முடி­வெ­டுத்­தேன். ஆனால், இந்த அளவுக்­குப் பாராட்­டு­கள் கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை," என்­கி­றார் பிரி­யா­மணி.

தெலுங்கு மறு­ப­திப்­பில் நடிப்­பது குறித்து இயக்­கு­நர் வெற்­றி­மா­ற­னி­டம் விவ­ரம் தெரி­வித்­தா­ராம். அவர் மன­தார வாழ்த்­தி­ய­து­டன், 'உங்­க­ளால் கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப நடிக்­க­மு­டி­யும்' என்­றும் குறிப்­பிட்­டா­ராம்.

"அசல் பதிப்­பில் மஞ்சு வாரி­ய­ரின் நடிப்பு அற்­பு­த­மாக இருந்­தது. அது­போன்று நேர்த்­தி­யாக நடிப்­பது எளி­தல்ல.கதா­பாத்­தி­ரங்­களை தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்­துக்­கொள்­வேன். அதே­ச­ம­யம் பாத்­தி­ரங்­க­ளு­ட­னான பந்­தம், பட வேலை­கள் முழு­மை­ய­டைந்த பின்­னர் முடி­வுக்கு வந்­து­வி­டும். 'நாரப்பா'விலும் இதே கோணத்­தில் யோசித்­துத்­தான் நடிப்­பது என முடிவு செய்­தேன், நல்­ல­வி­த­மாக நடித்­தேன்," என்­கி­றார் பிரியா­மணி.

பிரியாமணி