திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
a1087d02-3946-43da-9d05-ee167bf19fe4
-
multi-img1 of 2

தமன்னா: வெற்றிதான் முக்கியம்

தென்னிந்திய மொழிகளில்தான் தமக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் தமன்னா.

மேலும், தென்னிந்தியாவில் தான் தனக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

"தமிழ், தெலுங்கு படங்க ளில்தான் அதிகம் நடித்திருக்கி றேன். தென்னிந்திய ரசிகர்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறார்கள்.

"அனைத்துத் துறைகளிலும் கடுமையாக உழைப்பவர்கள் உள்ளனர். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான உணர்வுடன் தான் அனைவரும் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் வெற்றி கிடைக்கும் போதுதான் நாம் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். எனவே எதிலும் வெற்றி மிக முக்கியம்," என்கிறார் தமன்னா.

தலைகீழாகத் தொங்கிய அஞ்சலி

அண்மைக்காலமாக உடற் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் கோடம்பாக்கத்து நாயகிகள். அவர்களில் அஞ்சலியும் ஒருவர்.

அண்மையில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'வக்கீல் சாப்' படத்தில் நடித்த அஞ்சலி, மேலும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடிப்பதாகத் தகவல்.

இந்நிலையில், தாம் யோகாசனம் செய்யும் காணொளித் தொகுப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். நீளமான துணியில் தலைகீழாகத் தொங்கியபடி (படம்) அஞ்சலி யோகாசனம் செய்வது ரசிகர் களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்பயிற்சி தமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார் அஞ்சலி. நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் யோகாசனத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.