வேங்கட்ராகவன்: அவரவர் கடமையை சரியாகச் செய்தால் சிக்கல் இருக்காது

வேங்கட்ராகவன்: அவரவர் கடமையை சரியாகச் செய்தால் சிக்கல் இருக்காது

3 mins read
8806f13a-7e96-403a-a168-ea0cfca17d66
'கடமையைச் செய்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த். -

சுந்­தர்.சி.யிடம் உதவி இயக்குநராகப் பணி­யாற்­றிய வேங்­கட்­ராகவன் இயக்கத்­தில் உரு­வா­கிறது 'கட­மை­யைச் செய்'. இதில் எஸ்.ஜே.சூர்யா நாய­க­னாக நடிக்­கி­றார்.

நாம் அனை­வ­ரும் நமக்­கு­ரிய கட­மை­களைச் சரி­வரச் செய்­தால் போதும். உல­கம் சிக்­க­லின்­றிச் சுழ­லம், நமக்­கு­ரிய பலன்­கள் தன்­னால் வந்து சேரும் என்­ப­து­தான் இந்­தப் படம் நமக்­குச் சொல்­லப்­போ­கும் முக்­கி­ய­மான கருத்து.

தனது குரு­நா­த­ரான சுந்­தர்.சி இயக்­கத்­தில் உரு­வான சில படங்­களுக்கு வச­னம் எழுதி உள்ளார் வேங்­கட்­ரா­க­வன். பிறகு 'முத்­தின கத்­தி­ரிக்­கா' என்ற படத்தை இயக்கியுள்­ளார். முதல் படத்­தில் பெற்ற அனு­ப­வங்­க­ளின் துணை­யோடு அடுத்த சுற்றை தொடங்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

'கல­க­லப்பு 2', 'அரண்­மனை 3' படங்­க­ளுக்­கான பணியை முடித்து­விட்டு, புது வேகத்­து­டன் களமிறங்க திட்­டம் போட்­டி­ருந்த நிலை­யில், கொரோனா நெருக்­கடி அனைத்தை­யும் கெடுத்­து­விட்­ட­தில் வேங்­கட்­ரா­க­வனுக்கு பெரும் ஏமாற்­றம்.

"எனி­னும் கடந்த பிப்­ர­வரி மாதம் இப்படத்தின் வேலை­களை மீண்டும் தொடங்கி, இப்­போது முழுப்­ப­டத்தை­யும் முடித்­து­விட்­டோம். என் முதல் படத்­தின் நாய­கன் எனது குரு­நாதர் சுந்­தர்.சி.

"பல வெற்­றிப் படங்­க­ளைத் தந்த அவ­ரைப் போலவே எனது இரண்­டா­வது படத்­தின் நாய­க­னான எஸ்.ஜே.சூர்யா சாரும் வெற்றி இயக்கு­நர் என்­பது ஆச்­ச­ரி­யம் தரும் பொருத்­தம்," என்று உற்­சா­கத்­துடன் குறிப்­பி­டு­கி­றார் வேங்­கட்­ராகவன்.

இந்­தப் படத்­தில் எஸ்.ஜே.சூர்யா­வின் பங்­க­ளிப்பு என்ன?

"அவர்­தான் கதா­நா­ய­கன். அவர் தனது நடிப்­பால் மட்­டு­மல்ல, தனக்­குள் இருக்­கும் இயக்­கு­ந­ரை­யும் வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர்.

"அவர் இந்­தப் படத்­தில் என்­னென்ன வகை­யில் தனது பங்­க­ளிப்பை தந்­துள்­ளார் என்­பதை இப்­போதே சொல்லி­விட்­டால் சுவா­ர­சி­யம் போய்­வி­டும். ஆனால் ஒன்று மட்­டும் நிச்­ச­யம். இந்­தப் படம் குடும்­பத்­து­டன் திரை­யரங்­குக்கு வந்து பார்க்­கக் கூடிய படைப்­பா­கத்­தான் இருக்­கும்.

"அப்­ப­டிப்­பட்ட கதை­யைத்­தான் கையாண்­டுள்­ளோம். எந்­த­வொரு காட்­சி­யும் சுவா­ர­சி­ய­மாக இருக்­குமே தவிர, தேவை­யற்­ற­தா­கவோ, வேண்­டாத விஷ­யங்­களைச் சொல்­ வ­தா­கவோ இருக்­காது," என்று உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் வேங்­கட்­ரா­க­வன்.

எஸ்.ஜே.சூர்­யா­வின் கதா­பாத்­தி­ரம் இந்­தப் படத்­தில் மிக வித்தி­யா­ச­மான முறை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவ­ரது நடிப்பு படத்­துக்­குப் பெரும் பலம் என்­கி­றார்.

"எஸ்.ஜே.சூர்­யா­வின் நடிப்பு குறித்து ரசி­கர்­க­ளுக்கு சில எதிர்­பார்ப்­பு­கள் உள்­ளன. அவர் திரை­யில் தோன்­றும்­போது ஏதா­வது வித்­தி­யா­ச­மாக நடக்­கும் என நம்பு­கி­றார்­கள்.

"அந்த நம்­பிக்கை வீண்­போகாது. அதே­ச­ம­யம் அவ­ரைப் பற்றி ரசி­கர்­கள் யூகித்து வைத்­துள்ள அம்­சங்­கள் ஏதும் இடம்­பெறாது. அதை­விட வித்­தி­யா­ச­மான உடல்­மொழி, நடிப்பை வெளிப்­படுத்தி உள்­ளார்," என்று எதிர்­பார்ப்­பு­களை எகிற வைக்­கி­றார் இயக்­கு­நர் வேங்­கட்­ரா­கவன்.

இப்­ப­டத்­தின் நாயகி யாஷிகா ஆனந்த், விபத்­தில் சிக்கி படு­காயம் அடைந்­தி­ருப்­பது படக்­கு­ழு­வி­னரை சோகத்­தில் ஆழ்த்தி உள்­ளது. இது­வரை கவர்ச்­சி­க­ர­மான கதா­பாத்­தி­ரங்­களில் கவ­னம் செலுத்தி வந்த அவ­ருக்கு இந்­தப் படத்­தில் ஓர­ளவு கன­மான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது.

"யாஷி­கா­வால் எத்­த­கைய கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடிக்க முடி­யும். அதை நிரூ­பிக்­கும் வகை­யில் இந்தப் படத்­தில் நடித்­துள்­ளார்.

"எனது குரு­நா­தர் சுந்­தர்.சியின் பலம் என்ன என்­பதை அரு­கில் இருந்து பார்த்­துள்­ளேன். எந்­த­வொரு வச­ன­மும் யதார்த்­த­மா­க­வும் கதைக்கு ஏற்­ற­தா­க­வும் இருக்க வேண்­டும் என்­பார்.

"பிற­ரைக் கிண்­டல் செய்­வது போன்ற காட்சி என்­றா­லும்கூட, அதற்­கான வச­னங்­கள் யார் மனதை­யும் புண்­ப­டுத்­திவி­டக் கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருப்­பார். அதைத்­தான் நானும் பின்­பற்றி உள்­ளேன்.

"என்­னைப் பொறுத்­த­வரை கதா­நா­ய­க­னுக்­கும் நாய­கிக்­கும் இடையே உள்ள உடல்­மொழி இரண்­டாம் பட்­சம்­தான். நாம் சொல்­லப்­போ­கும் கதைக்­கும் அதை திரை­யில் காணும் ரசி­கர்­க­ளுக்­கும் இடை­யே­யான உடல்­மொ­ழி­தான் மிக முக்­கி­யம்," என்­கி­றார் இயக்­கு­நர் வேங்­கட்­ரா­கவன்.