எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா'.
மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், துளசி, ஸ்ரீ பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 1990களின் தொடக்கத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
"அந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் அதுகுறித்து பெரிய விவாதங்களில் ஈடுபட்டனர்.
"அந்தச் சம்பவம் கதாநாயகன், நாயகி இருவரது வாழ்க்கையிலும் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசி உள்ளோம்.
"இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் அமைத்துள்ளனர்.
"கடந்த ஆண்டு சித்திரை தமிழ்ப் புத்தாண்டு வேளையில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா நெருக்கடியால் அது சாத்தியமாகவில்லை. மிக விரைவில் படம் வெளியாகும்.
"வழக்கமாக சசிகுமார் படங் களில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கும்," எனத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

