விரைவில் மிரட்ட வருகிறது 'கொம்பு வச்ச சிங்கம்டா'

விரைவில் மிரட்ட வருகிறது 'கொம்பு வச்ச சிங்கம்டா'

1 mins read
d459e636-e03b-406e-b41b-df492b3026a2
'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் சசிகுமார், மடோனா. -

எஸ்.ஆர்.பிர­பா­கர் இயக்­கத்­தில் சசிகுமார், மடோனா செபாஸ்­டி­யன் நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் 'கொம்­பு­ வச்ச சிங்­கம்டா'.

மேலும் கலை­ய­ர­சன், சூரி, யோகி­பாபு, இயக்­கு­நர் மகேந்­தி­ரன், துளசி, ஸ்ரீ பிரி­யங்கா உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

கடந்த 1990களின் தொடக்­கத்­தில் தமி­ழ­கத்­தின் குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யில் நிகழ்ந்த உண்­மைச் சம்­ப­வம் ஒன்றை மைய­மாக வைத்து திரைக்­கதை அமைத்­துள்­ள­னர்.

"அந்­தச் சம்­ப­வம் தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் தாக்­கத்தை ஏற்­படுத்தியது. மக்­கள் அனை­வ­ரும் அது­கு­றித்து பெரிய விவா­தங்­களில் ஈடு­பட்­ட­னர்.

"அந்­தச் சம்­ப­வம் கதா­நா­ய­கன், நாயகி இரு­வ­ரது வாழ்க்­கை­யி­லும் எந்­த­வி­த­மான தாக்­கத்தை ஏற்­படுத்து­கிறது என்­பதை விரி­வாக அலசி உள்ளோம்.

"இப்­ப­டத்­திற்கு திபு நைனன் தாமஸ் இசை அ­மைத்­துள்­ளார். ஏகாம்­ப­ரம் ஒளிப்­ப­திவு செய்ய, சண்­டைக் காட்­சி­களை அன்­ப­றிவ் சகோ­த­ரர்கள் அமைத்­துள்­ள­னர்.

"கடந்த ஆண்டு சித்­திரை தமிழ்ப் புத்­தாண்டு வேளை­யில் படத்தை வெளி­யிட முடிவு செய்­தி­ருந்­தோம். ஆனால் கொரோனா நெருக்­க­டி­யால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. மிக விரை­வில் படம் வெளி­யா­கும்.

"வழக்கமாக சசிகுமார் படங் களில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கும்," எனத் தயா­ரிப்­புத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.