ஹைதராபாத்தில் 'கோலிவுட்'

ஹைதராபாத்தில் 'கோலிவுட்'

3 mins read
ab54ed7e-a4de-4480-b023-524bad57a9eb
-

கொரோனா நெருக்­கடி முடி­வுக்கு வந்­தா­லும் மேலும் பல பிரச்­சி­னை­கள் தங்­களை வட்­ட­மிட்­டுக் கொண்­டி­ருப்­ப­தாக தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னர் சொல்­கின்­ற­னர்.

படப்­பி­டிப்­பு­களை நடத்த போது­மான அரங்கு­களும் வீடு­களும் இல்லை என்­ப­து­தான் அவற்­றுள் முக்­கி­ய­மா­னவை.

இத­னால் பெரும்­பா­லா­ன­வர்­கள் அண்டை மாநி­லங்­க­ளான ஆந்­திரா, தெலுங்­கா­னா­வுக்­குப் படை­யெ­டுக்­கின்­ற­னர். கடந்த சில ஆண்­டு­களாக ஹைத­ரா­பாத் நக­ரில் உள்ள ராமோ­ஜி­ராவ் திரைப்­பட நக­ரில்­தான் முன்­னணி தமிழ் நடி­கர்­கள் நடிக்­கும் படங்­க­ளுக்­கான படப்­பி­டிப்­பு­கள் நடந்து வரு­கின்­றன.

அங்கு படப்­பி­டிப்பு நடப்­பது தெரிந்­தால் கோடம்­பாக்­கத்து கலை­ஞர்­கள் உற்­சா­க­மா­கி­வி­டு­கி­றார்­கள். கார­ணம், அங்­குள்ள வச­தி­கள் அப்­ப­டிப்­பட்­டவை என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

இப்­போது ஹைத­ரா­பாத்­தில்­தான் ரஜி­னி­யின் 'அண்­ணாத்த', அஜித்­தின் 'வலிமை', 'தனுஷ் 43', மணி­ரத்­னத்­தின் 'பொன்­னி­யின் செல்­வன்', விஷா­லின் 'எனிமி' எனப் பல படங்­களின் பணி­கள் நடந்து வரு­கின்­றன என்­ப­தை­யும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

"ராமோ­ஜி­ராவ் திரைப்­பட நக­ரில் இல்­லாத வசதி என்ற பேச்­சுக்கே இட­மில்லை.

"கொரோனா காலம் என்­ப­தால் வெளி­யாட்­கள் உள்ளே வரா­ம­லும் உள்ளே இருப்­ப­வர்­கள் வெளியே போகா­ம­லும் இருப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை எளி­தில் செய்ய முடி­யும். மிகப் பாது­காப்­பான சூழ­லில் அங்கு வேலை­களைக் கவ­னிக்­க­லாம்.

"சாலை­யில் எடுக்­க­வேண்­டிய காட்­சி­களை சென்­னை­யில் பட­மாக்­கு­வது எளி­தல்ல. அதற்­காக பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் அனு­மதி பெற வேண்டி இருக்­கும்.

"தவிர, சென்­னை­யில் உள்ள ஸ்டூ­டி­யோக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் வெகு­வா­கக் குறைந்­து­விட்­டது. அத­னால்­தான் தமிழ் சினி­மாக்­கா­ரர்­கள் ஹைத­ரா­பாத்தை நோக்­கிப் படை­யெ­டுக்­கி­றோம்," என்­கி­றார் தயா­ரிப்­பா­ளர் எஸ்.ஆர்.பிரபு.

சென்­னை­யில் தற்­போது இயங்­கும் சில ஸ்டூடி­யோக்­க­ளை­யும் தொலைக்­காட்­சித் தொடர்­க­ளுக்­காக முன்­கூட்­டியே பல மாதங்­க­ளுக்கு முன்­ப­திவு செய்து விடு­கி­றார்­க­ளாம். மேலும், முன்­பு­போல் குடும்­பக் காட்­சி­க­ளைப் பட­மாக்க சென்­னை­யில் வீடு­கள் கிடைப்­ப­தில்லை என்­றும் திரை­யு­ல­கத்­தி­னர் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

ஏவி­எம், டிஆர் கார்­டன், அம்­பிகா கார்­டன் போன்ற பல பெரிய ஸ்டூ­டி­யோக்­கள் இப்­போது முழு­வீச்­சில் இயங்­கு­வ­தில்லை அல்­லது மூடப்­பட்டு­விட்­டன என்­ப­தும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கிறது. ஹைத­ரா­பாத்­தில் ராமோஜி திரைப்­பட நக­ரம், ராம­நா­யுடு ஸ்டூ­டி­யோஸ், சாரதி ஸ்டூ­டி­யோஸ், அன்­ன­பூ­ரணா ஸ்டூ­டி­யோஸ் ஆகி­யவை ஐம்­பது ஆண்­டு­க­ளாக சிறப்­பாக இயங்கி வரும் நிலை­யில், சென்­னை­யில் ஏவி­எம், முரு­கா­லயா, பரணி, சியா­மளா போன்ற ஸ்டூ­டி­யோக்­கள் முடப்­பட்­டு­விட்­டன.

"ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடி­கர்­களும் கூட ஹைத­ரா­பாத்­தில் படப்­பி­டிப்பு நடத்­தப்­ப­டு­வதை விரும்­பு­கி­றார்­கள். கார­ணம், அங்­குள்ள வச­தி­கள், பாது­காப்பு. தவிர, படப்­பிடிப்­புக்­கான செல­வு­களும் குறைவு.

"சென்­னை­யிலோ நிலைமை இதற்கு நேர்­மாறாக உள்­ளது. செலவு அதி­கம் என்­ப­து­டன் நேர­மும் விர­ய­மா­கிறது. சிவ­கார்த்­தி­கே­யன் போன்ற இளம் நடி­கர்­களும் கூட இப்­போது ஒரே சம­யத்­தில் இரண்டு அல்­லது மூன்று மொழி­களில் உரு­வாக்­கப்­படும் படங்­களில் நடிக்­கி­றார்­கள். எனவே கால்­ஷீட் விஷ­யத்­தில் சரி­யாக இருக்­க­வேண்­டும். சிறு தாம­தங்­கள் ஏற்­பட்­டா­லும் சிக்­க­லா­கி­வி­டும்.

"எனவே எந்­த­வி­த­மான இடை­யூ­று­களும் இல்லா­மல் படப்­பி­டிப்பை நடத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்­யுங்­கள் எனத் தயா­ரிப்­புத் தரப்­பி­டம் கூறி­வி­டு­கின்­ற­னர். அதன்­பி­றகு தயா­ரிப்பு நிர்­வாகி தேர்வு செய்­யும் முதல் இடம் அண்டை மாநி­லங்­களில் உள்ள ஸ்டூ­டி­யோ­வா­கத்­தான் இருக்­கும். இன்­றைய தேதி­யில் ஒரு திரைப்­ப­டத்தை எடுப்­பதைக் காட்­டி­லும் அதை வெளி­யி­டு­வ­து­தான் சவா­லாக இருக்­கிறது. எனவே திட்­ட­மிட்­ட­படி குறித்த தேதி­யில் படத்தை எடுத்து முடிக்­கா­விட்­டால் தயா­ரிப்­பா­ளர்­கள் பாடு திண்­டாட்­டம்­தான்.

"அத­னால் படத்­துக்­குப் பூசை போட்ட கையோடு, படப்­பி­டிப்­பைத் தொடங்க ஹைத­ரா­பாத் உட்­பட அண்டை மாநி­லங்­களில் நல்ல முறை­யில் இயங்கி வரும் ஸ்டூ­டி­யோக்­களை முன்­ப­திவு செய்­கி­றார்­கள். கொரோனா நெருக்­கடி காலத்­தில் பாடம் கற்­றுக்­கொண்ட முன்­னணி நாய­கர்­களும் நாயகி­களும் இந்த ஏற்­பாட்டை வர­வேற்­கி­றார்­கள்.

"சென்­னை­யில் படப்­பி­டிப்­புக்­கான வச­தி­கள் அதி­க­ரித்து, நடை­மு­றைச் சிக்­கல்­கள் குறைந்­தால் மட்­டுமே ஹைத­ரா­பாத்­தில் முகா­மிட்­டுள்ள தமிழ் சினிமா கலை­ஞர்­கள் மீண்­டும் கோடம்­பாக்­கம் பக்­கம் பார்­வை­யைத் திருப்­பு­வார்­கள்," என்­கின்றனர் விவ­ரப் புள்­ளி­கள்.

, :   

சிவ கார்த்திகேயன்