அடுத்து நடிக்கும் படங்கள்

அடுத்து நடிக்கும் படங்கள்

3 mins read
af9c0110-29d1-4f82-b618-eb5b685cabce
நித்யா மேனன் -

திரைப்படப் படப்­பி­டிப்­பு­க­ளுக்கு பல்­வேறு மாநில அர­சு­கள் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் அனுமதி அளித்து வரு­கின்­றன. இதை­ய­டுத்து திரை­யுல­கில் இருந்து பல்­வேறு புதுப் படங்களுக்கான அறி­விப்­பு­கள் அடுத்­த­டுத்து வெளி­யான வண்­ணம் உள்­ளன.

நடிகை நித்யா மேனன் தெலுங்­குப் படம் ஒன்­றில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். முதன்­மு­றை­யாக தெலுங்கு திரை­யு­ல­கில் 'பவர் ஸ்டார்' என்று குறிப்­பி­டப்­படும் பவன் கல்­யா­ணு­டன் அவர் இணைந்து நடிக்க உள்­ளார். இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.

கடந்­தாண்டு மலை­யா­ளத்­தில் வெளி­யாகி பெரிய வெற்­றி­யைப் பெற்ற 'அய்­யப்­ப­னும் கோஷி­யும்' படத்தை பல்­வேறு மொழி­களில் மறு­ப­திப்பு செய்ய பலத்த போட்டி நில­வு­கிறது.

மலை­யா­ளத்­தில் அய்­யப்­ப­னாக பிஜூ­மே­ன­னும் கோஷி­யாக பிருத்­வி­ரா­ஜும் நடித்­தி­ருந்­த­னர். இரண்டு அதி­கா­ரி­க­ளின் இடை­யில் ஏற்­படும் மோதலை யதார்த்­த­மாக எடுத்­துக் காட்­டி­யது இந்­தத் திரைப்­ப­டம். இத­னால் ரசி­கர்­க­ளி­டம் மிகப்­பெ­ரிய வர­வேற்பு கிடைத்­தது.

இந்­தப் படத்தை தற்­போது தெலுங்­கில் மறு­ப­திப்பு செய்­கின்­ற­னர். இதில் பிஜூ­மே­னன் நடித்த அய்­யப்­பன் கதா­பாத்­தி­ரத்­தில் பவன் கல்­யா­ணும், பிரித்­வி­ராஜ் கதா­பாத்­தி­ரத்­தில் ராணா­வும் நடிக்­கின்­ற­னர்.

இப்­ப­டத்­தில் இடம்­பெற்ற கண்­ணம்மா கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­க­ளி­டம் பலத்த வர­வேற்­பைப் பெற்­றது. கதைப்­படி, அய்­யப்­ப­னின் மனைவி கண்­ணம்மா. இந்த வேடத்­தில்­தான் நித்யா ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் முபா­ரக் தயா­ரிக்­கும் பெய­ரி­டப்­ப­டாத படத்­தில் ஜி.வி.பிர­கா­ஷும் காயத்­ரி­யும் இணைந்து நடிக்­கின்­ற­னர்.

இதற்­கான படப்­பி­டிப்பு நாளை தொடங்­கு­கிறது. எம்.எஸ்.பாஸ்­கர், கஞ்சா கருப்பு உள்­ளிட்ட பலர் நடிக்­கின்­ற­னர்.

இது முழு­நீள திகில், அடி­த­டிப் பட­மாக உரு­வா­கிறது. இந்­தக் கதைக்கு ஜி.வி.யும் காயத்­ரி­யும்­தான் பொருத்­த­மாக இருப்­பார்­கள் என்று தாம் கரு­தி­ய­தா­க­வும் அந்த கணிப்பு பொய்­யா­க­வில்லை என்­றும் சீனு ராம­சாமி கூறி­யுள்­ளார்.

"முக்­கிய காட்­சி­களை கிரா­மத்­துப் பின்­ன­ணி­யில் பட­மாக்கி உள்­ளோம். ஆண்­டிப்­பட்டி, தேனி, கொடைக்­கா­ன­லில் படப்­பி­டிப்பு நடக்­கிறது. ரகு­நந்­தன் இசை­ய­மைக்க, வைர­முத்து பாடல்­களை எழு­தி­யுள்­ளார்.

"படப்­பி­டிப்பு துவங்­கும் முன்பே, படத்­திற்­கான வியா­பா­ரம் தொடங்­கி­விட்­டது. இரண்டு 'ஓடிடி' நிறு­வ­னங்­கள் பேசி வரு­கின்­ற­ன," என்று சீனு ராம­சாமி தெரி­வித்­துள்­ளார்.

'சார்­பட்டா பரம்­பரை' படத்­தின் வெற்­றியை அடுத்து, பா.ரஞ்­சித் முழு­நீள காதல் கதையை இயக்க உள்­ளார். 'நட்­சத்­தி­ரம் நகர்­கிறது' என தலைப்பு வைத்­துள்­ள­னர்.

இந்­தப் படத்­துக்கு 'சார்­பட்டா பரம்­பரை' நாயகி துஷாரா நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளார். கதா­நா­ய­க­னாக அசோக் செல்­வன் அல்­லது நடி­கர் ஜெய­ரா­மின் மகன் காளி­தாஸ் ஆகிய இரு­வ­ரில் ஒரு­வர் நடிக்­கக்­கூ­டும்.

'சார்­பட்டா' படத்­தில் மிக இயல்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்தி இருந்­தார் துஷாரா. தனது நடிப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் ரஞ்­சித் அடுத்த வாய்ப்­பை­யும் அளித்­தி­ருப்­பது அவரை உற்­சா­கப்­பட வைத்­துள்­ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் உரு­வா­கிறது இயக்­கு­நர் லிங்­கு­சா­மி­யின் அடுத்த படம். இதில், நாய­க­னாக ஆதி­யும் நாய­கி­யாக அக்­‌ஷரா கௌடா­வும் ஒப்­பந்­த­மாகி உள்­ள­னர்.

தெலுங்கு முன்­னணி நடி­கர் ராம் பொத்­தி­னேனி, கிருத்தி ஷெட்டி ஆகி­யோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர்.

இது­வரை அதிக ஒப்­ப­னைக்கு இடம்­கொ­டுக்­கா­மல் யதார்த்­த­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­பதே தமது விருப்­பம் என்று சொல்லி வந்த அக்­‌ஷரா, இந்­தப் படத்­தில் நக­ரத்­துப் பெண்­ணாக நடிக்க உள்­ளார். இந்­தப் புதிய முயற்­சி­யில் ஈடு­ப­டு­வது தமக்கு உற்­சா­கம் அளிப்­ப­தாக அவர் கூறு­கி­றார்.

"முதல் முறை­யாக இப்­ப­டத்­தின் தமிழ்ப் பதிப்­பில் மதுரை தமிழ் பேசும் பெண்­ணா­க­வும் தெலுங்­குப் பதிப்­பில் கடப்பா தெலுங்கு பேசும் பெண்­ணா­க­வும் நடிக்­கி­றேன். உண்­மை­யில் இது ஒரு சவா­லான பணி. ஆனால், மிகுந்த ஆர்­வத்­து­டன் நடிப்­பேன்," என்­கி­றார் அக்­‌ஷரா கௌடா. இவர் ஏற்­கெ­னவே தமி­ழில் நடித்து முடித்­துள்ள 'சூர்ப்­ப­னகை', 'இடி­யட்' ஆகிய இரு படங்­களும் அடுத்­த­டுத்து வெளி­யீடு காண உள்­ளன.