அம்மா சொல்லை மீறாத தனுஷ்

அம்மா சொல்லை மீறாத தனுஷ்

3 mins read
b3eddcdb-2239-4422-b4fc-cbf4aac162b7
-

அண்­மை­யில் தமது 38ஆவது பிறந்­த­நாளைக் கொண்­டாடி உள்­ளார் தனுஷ்.

கொரோனா நெருக்­கடி வேளை­யி­லும் அவ­ரது புதுப்­ப­டங்­கள் வெளி­யீடு கண்­டுள்­ளன. ஒவ்­வொரு படத்­தை­யும் தகுந்த திட்­ட­மி­ட­லோடு ஏற்று நடிப்­ப­தும் கால்­ஷீட், சம்­ப­ளம் உட்­பட அனைத்து விஷ­யங்­க­ளி­லும் முறை­யாகச் செயல்­ப­டு­வ­தும்­தான் அவ­ரது வெற்­றிக்கு கார­ணம் என்­கி­றார்­கள் தனுஷுக்கு நெருக்க­மா­ன­வர்­கள்.

அவ­ரைப் பற்­றிய கூடு­தல் விவ­ரங்­கள் சில­வற்றைத் தெரிந்து கொள்ள விரும்­பு­கி­ற­வர்­க­ளுக்கு அடுத்து வரும் வரி­கள் சுவா­ர­சி­ய­மா­ன­தாக இருக்­கும்.

தனுஷ் முழு­மை­யான சிவ­பக்­த­ராம். எப்­போ­தும் லிங்க வழி­பா­டு­தான். எப்­போ­தெல்­லாம் எந்­தக் கடி­தம் எழு­தி­னா­லும் 'ஓம் நமச்­சி­வாயா' எனக் குறிப்­பிட்­டு­தான் முடிக்­கி­றார்.

எதிர்­வ­ரும் புத்­தாண்­டில் சென்­னை­யில் புது வீட்­டில் குடி­யேற உள்­ளார் தனுஷ். அது­வும் சென்­னை­யில் பணக்­கா­ரர்­கள் அதி­கம் குடி­யி­ருக்­கும் போயஸ் தோட்­டப் பகு­தி­யில் தான் புது வீட்­டைக் கட்டி உள்­ளார்.

மாம­னார் ரஜி­னி­யும் இதே பகு­தி­யில் குடி­யி­ருப்­பது ஒரு­பக்­கம் இருக்க, இங்கு ஒரு சதுர அடி நிலத்­தின் விலை வாய்­பி­ளக்க வைக்­கும்.

அப்­ப­டிப்­பட்ட இடத்­தில், தன் மனை­வி­யின் விருப்­பத்தை நிறை­வேற்ற பல கோடி­க­ளைக் கொட்டி வீடு கட்­டி­யுள்­ளார் தனுஷ். அதி­லும், முழுக்க முழுக்­கத் தன் உழைப்­பால், தன் சம்­பாத்­தி­யத்­தைக் கொண்டு இடம் வாங்கி கட்­டப்­படும் வீடு இது.

தனுஷ் இப்­போது சுத்த சைவ­மாக மாறி­விட்­டார். அசைவ உண­வு­களை தொடு­வதே இல்லை. உரு­ளைக்­கி­ழங்கு பொரி­யல், அப்­ப­ளம், ரசம் தான் பிடித்­த­மான உணவு வகை­கள்.

இளை­ய­ராஜா இசைக்கு தாம் அடிமை என்­பார் தனுஷ். இளை­ய­ரா­ஜா­வின் கச்­சேரி என்­றால் இவரை முதல் வரி­சை­யில் பார்க்க முடி­யும்.

நகைச்­சுவை நடி­கர்­களில் கவுண்­ட­ம­ணி­தான் தனு­ஷின் மனம் கவர்ந்­த­வர். அவ­ரது உடல்­மொழியை யாரும் காப்­பி­ய­டிக்­கவே முடி­யாது என்­பா­ராம்.

கவுண்­ட­ம­ணி­யு­டன் ஒரு படத்­தில் கூட சேர்ந்து நடிக்க முடி­ய­வில்லை என்ற ஏக்­கம் தனு­ஷுக்கு அதி­க­மா­கவே உள்­ளது. அதே போல் 'ஆச்சி' மனோ­ர­மா­வு­டன் இணைந்து நடிக்க முடி­யா­மல் போனது தமது வாழ்­நாள் சோகங்­களில் ஒன்று என்­றும் நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் அடிக்­கடி சொல்லி வருத்­தப்­ப­டு­வா­ராம்.

தனுஷ் ஓர் 'அம்மா பிள்ளை'. தாயார் சொல்­லுக்கு மறுப்­பேச்சு என்­பதே அவ­ரி­டம் கிடை­யாது.

உல­கத்­தின் எந்த மூலை­யில் இருந்­தா­லும் சரி, தின­மும் இரண்டு நிமி­டங்­க­ளா­வது தன் தாயா­ரு­டன் பேசு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

நேர­மும் வாய்ப்­பும் அமைந்­தால் தேனிக்கு அரு­கில் இருக்­கும் கருப்­ப­சாமி குல­தெய்வ கோவி­லுக்கு சென்று வரு­வது அவ­ரது வழக்­கம். குறைந்­த­பட்­சம் இரண்டு நாள்­க­ளா­வது அங்கே தங்கி­இருந்து சாமி கும்­பிட்டு, சம்­பி­ர­தா­யங்­களை எல்­லாம் முடித்­து­விட்­டுத்­தான் சென்னை திரும்­பு­வார்.

"உல­க­ள­வி­லான நக­ரங்­களில் தனு­ஷுக்­குப் பிடித்­த­மான ஊர் லண்­டன். அங்­குள்ள அனைத்­துப் பகு­தி­களும் அவ­ருக்கு அத்­துப்­படி. எத்­தனை முறை அங்கு சென்­று­வந்­தா­லும் சலிப்பே ஏற்­ப­டு­வ­தில்லை என்­றும் வாழ்­நாள் முழு­வ­தும் இது நீடிக்­கும் என்­றும் அவர் அடிக்­கடி சொல்­வ­துண்டு என்­கிறது நட்பு வட்­டா­ரம்.

மழையை நேசிக்­கும் ரசிக்­கும் இயற்கை பிரி­யர் தனு­ஷுக்கு, மழை வேளை­யில் சூடாக வடை சாப்­பி­டு­வது மிக­வும் பிடித்­த­மான விஷ­யம். அதே­போல் நாவல்­கள் படிப்­பது என்­றா­லும் ரொம்­பப் பிடிக்­கும். ஆனந்த விக­ட­னில் வெளி­யான சு.வெங்­க­டே­ச­னின் 'வேள்­பாரி' தான் அவர் அண்­மை­யில் படித்­தது.

அண்­மைக்­கா­ல­மாக இந்தி, ஹாலி­வுட் படங்­க­ளி­லும் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கி­றார் தனுஷ்.