சர்ச்சைக்குரிய அல்லது சவாலான கதாபாத்திரங்கள் எனில் தயக்கமின்றி என்னை அணுகலாம் என்கிறார் ஆண்ட்ரியா.
அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடிக்க அவர் விதிக்கும் ஒரே நிபந்ததனை, அதிக சம்பளம் என்பது மட்டும்தான்.
இதுவரை ஒரு படத்துக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தவர், விரைவில் திரைக்கு வர இருக்கும் 'பிசாசு 2' படத்துக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.
"இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியதற்கு காரணம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஆண்ட்ரியா மிக கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருந்தது. அதனால்தான் அவர் கோரிக்கை வைக்கும் முன்பே தயாரிப்புத் தரப்பில் ஊதியத்தை உயர்த்திவிட்டனர்.
"மேலும் இயக்குநர் மிஷ்கின் அனைத்து பேட்டியிலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம்தான் படத்தை தாங்குவதுபோல் குறிப்பிட்டுள்ளார்.
"அவரது ஆதரவு இருப்பதும் ஆண்ட்ரியாவுக்கு சாதகமாகிவிட்டது," என்று கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர். எப்படியோ தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்து இருப்பது ஆண்ட்ரியாவுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

