பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தின் மறுபதிப்பாகும்.
பிரசாந்தும் சிம்ரனும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இதில் கண்பார்வையற்ற இசைக் கலைஞராக சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

