'பிக் பாஸ்' புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் இணைந்து நடிக்கும் படம் 'கூகுள் குட்டப்பன்'.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தைத் தயாரிப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தும் உள்ளார்.
'ஆண்ட்ராய்டு குச்சுப்பன்' என்ற தலைப்பில் வெளியாகி மலையாளத்தில் வசூலைக் குவித்த படத்தின் மறுபதிப்பாக உருவாகிறது. மனோபாலா, யோகி பாபு ஆகியோரும் உள்ளனர்.
"வெளிநாட்டில் வேலை செய்யும் மகன், தன்னுடைய தந்தை தனியாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கு ஓர் இயந்திர மனிதனைப் பரிசாக அளிக்கிறார். தந்தையும் அந்த இயந்திர மனிதனும் மிகவும் நெருக்கமாகிவிடும் வேளையில் இருவரையும் பிரிக்க வேண்டிய கட்டாயம் மகனுக்கு ஏற்படுகிறது. அப்போது நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம்," என்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான சபரி, சரவணன்.
இருவருமே கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி உள்ளனர்.

