மனிதனுடன் உறவாடும் இயந்திர மனிதன்

1 mins read
4e6dfd51-a908-41c0-8769-13b4e9aa783b
'கூகுள் குட்டப்பன்' படத்தில் தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, லாஸ்லியா. -

'பிக் பாஸ்' புகழ் தர்­ஷ­னும் லாஸ்லி­யா­வும் இணைந்து நடிக்­கும் படம் 'கூகுள் குட்­டப்­பன்'.

இயக்­கு­நர் கே.எஸ்.ரவிக்­கு­மார் இப்­ப­டத்தைத் தயா­ரிப்­ப­து­டன், முக்கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்று நடித்­தும் உள்­ளார்.

'ஆண்ட்­ராய்டு குச்­சுப்­பன்' என்ற தலைப்­பில் வெளி­யாகி மலை­யா­ளத்­தில் வசூ­லைக் குவித்த படத்­தின் மறு­ப­திப்­பாக உரு­வா­கிறது. மனோ­பாலா, யோகி பாபு ஆகி­யோ­ரும் உள்­ளனர்.

"வெளி­நாட்­டில் வேலை செய்­யும் மகன், தன்­னு­டைய தந்தை தனி­யாக இருப்­பதை தாங்­கிக் கொள்ள முடி­யா­மல் அவ­ருக்கு ஓர் இயந்­திர மனி­தனைப் பரி­சாக அளிக்­கி­றார். தந்­தை­யும் அந்த இயந்­திர மனி­த­னும் மிக­வும் நெருக்­க­மா­கி­வி­டும் வேளை­யில் இரு­வ­ரை­யும் பிரிக்க வேண்­டிய கட்­டா­யம் மக­னுக்கு ஏற்­ப­டு­கிறது. அப்­போது நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பு­தான் இந்­தப் படம்," என்­கி­றார்­கள் இரட்டை இயக்­கு­நர்­களான சபரி, சர­வ­ணன்.

இரு­வ­ருமே கே.எஸ். ரவிக்­குமாரி­டம் உதவி இயக்­கு­நர்­களாகப் பணி­யாற்றி உள்­ள­னர்.