தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அடிபட்டும்கூட நடித்தார்'

1 mins read
9b184af7-dcf8-4746-92d4-8d895a7f5f85
படப்பிடிப்பின்போது மதுமிதாவுடன் சேரன். -

'ஆனந்­தம் விளை­யா­டும் வீடு' என்ற படத்­தின் படப்­பி­டிப்­பின்­போது தலை­யில் அடி­பட்டு எட்டு தையல்­கள் போட்ட பிற­கும் தனக்­கான காட்சி­களில் நடித்துள்­ளார் சேரன்.

அவ­ரது இந்த அர்ப்­ப­ணிப்­பும் தொழில்­பக்­தி­யும் வியக்க வைத்­த­தாக படத்­தின் இயக்­கு­நர் நந்தா பெரி­ய­சாமி கூறி­யுள்­ளார்.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்­பின்­போது, கால் தவறி பின்­பு­ற­மாக விழுந்த சேர­னுக்கு தலை­யில் பல­மாக அடி­பட்­டது. ஓய்­வெ­டுக்­கும்­படி இயக்­கு­நர் கூறி­ய­போ­தும், படப்­பிடிப்பு நடக்­கும் இடத்­துக்கே மருத்து­வரை வர­வ­ழைத்து தையல் போட்­டுக்­கொண்ட சேரன், மீண்­டும் நடிக்­கத் தொடங்­கி­ உள்ளார்.