அஜித் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 29 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்காக சிறிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் 'வாழு, வாழ விடு' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலை யாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
"ரசிகர்களிடமிருந்து அன்பையும் வெறுப்பாளர் களிடமிருந்து வெறுப்பையும் நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்கிறேன். என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித்குமார்," என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரது இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி் உள்ளது.

