'அவளுக்காக உலகையே வாங்கலாம்'

2 mins read
ff4b1b5d-8011-4d0c-a5bf-eae6bc839761
-

நடிகை நயன்­தா­ராவை நயா­கரா அரு­வி­யு­டன் ஒப்­பிட்டு கவிதை மழையை பொழிந்­துள்­ளார் அர­சி­யல்­வா­தி­யும் பேச்­சா­ள­ரு­மான நாஞ்­சில் சம்­பத்.

தமிழ் சினி­மா­வில் அறி­மு­க­மா­கும் நடி­கை­கள் பலர் வந்த வேகத்­தில் சொந்த ஊருக்கு மூட்­டையை கட்­டும் நிலை­யில், சும்மா கிள்­ளி­யாக 15 ஆண்­டு­க­ளுக்கு மேல் முன்­னணி நாய­கி­யாக மட்­டுமே நடித்து, தனக்­கான மார்க்­கெட்டை சரிய விடா­மல், ரசி­கர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ள­வர் நயன்­தாரா.

இவர் அறி­மு­க­மா­கும்போது, இந்த அள­வுக்கு இவர் வளர்­வார் என்று யாரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்­கள். அதே­போல் காதல் தோல்­வி­களில் துவண்­டா­லும் அதில் இருந்து மீண்டு இன்று நடிகை என்­பதை தாண்டி தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் தொழி­லில் முத­லீடு செய்­வ­தி­லும் முனைப்பு காட்டி வரு­கி­றார் நயன்­தாரா. முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளுக்கு நிக­ராக இவரை மட்­டுமே நம்பி படம் எடுக்க பல தயா­ரிப்­பா­ளர்­கள் வரி­சை­யில் போட்டி போட்டு நிற்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் பிர­பல அர­சி­யல்­வா­தி­யும் பேச்­சா­ள­ரு­மான நாஞ்­சில் சம்­பத்திடம் ஊட­கம் ஒன்­று நயன்தா­ரா­வைப் பற்றி கேட்­ட­போது, "நயன்­தாரா தமிழ்­நாட்­டின் திரை வர­லாற்­றில் அதி­ச­யம் செய்­த­வர்! பொது­வாக நடி­கை­

கள் சில படங்­களில் நடிப்பார்­கள். பின்­னர் தூக்கி வீசப்­ப­டு­வார்­கள். யாரா­லும் தூக்கி வீச­மு­டி­யாத அள­விற்கு தொடர்ந்து தன்னை நிலை நிறுத்­திய அதி­ச­யத்­திற்கு பெயர் நயன்­தாரா," என்று கூறி­ய­து­டன் "நயன்­தாரா... அவள் நயா­கரா.. அதில் நனைய பலர் விரும்பு­கி­றார்­கள்... ஆனால் நயா­க­ரா­வில் நனைய அனு­ம­தி­யில்லை! நயன்­தாரா... எதை­யும் விலை கொடுத்து வாங்­கும் அள­வுக்கு எனக்கு

வச­தி­யில்லை! ஆனால் நயன்­தா­ரா­வுக்கு கொடுக்க உல­கத்தை வாங்­க­லாமா என ஆசைப்­ப­டு­

கி­றேன்!'' என்று கவி­தை­யை­யும் கூறி­யது நயனின் ரசிகர்களுக்கு காதில் தேனை ஊற்றியதுபோல் இருந்தது.