தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீர்த்தியை சோகத்தில் ஆழ்த்திய மெஸ்ஸி

2 mins read
bf7e1da8-46c8-4a4b-9131-13e2f80c9719
கீர்த்தி சுரேஷ் -

'மகா­நதி', 'பென்­கு­யின்', 'மிஸ் இந்தியா' என கதா­நா­ய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­க­ளா­கத் தேர்வு செய்து நடிக்­கி­றார் கீர்த்தி சுரேஷ். அதே­ச­ம­யம் 'அண்­ணாத்த' படத்­தில் ரஜி­னி­யின் தங்கை வேடத்­தி­லும் நடிக்­கி­றார்.

"நானாக வாய்ப்­பு­க­ளைத் தேடிச் செல்­வ­தில்லை. அதே­ச­ம­யம் எனக்­குப் பிடித்­த­மான கதை­க­ளி­லும் கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடிக்­கி­றேன். ரஜினி போன்ற உச்ச நடி­கர்­க­ளு­டன் எத்­த­கைய வேடம் கிடைத்­தா­லும் நடிக்­கத் தயார்.

"எனி­னும் எதிர்­கா­லத்­தைக் கவ­னத்­தில் கொள்­ளும்­போது நான் இப்­போது தேர்வு செய்­யும் படங்­களும் அவற்­றின் கதை­களும் சரி­யாக இருப்­ப­தா­கத் தோன்­று­கிறது. 'அண்­ணாத்த' படம் எப்­போது வரும் என ரசி­கர்­க­ளைப் போன்றே நானும் ஆவ­லு­டன் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் கீர்த்தி.

திடீ­ரென உடல் இளைத்­து­விட்­டீர்­களே? என்­ப­து­தான் இவரை அண்­மைக்­கா­ல­மாக நேரில் சந்­திக்­கும் அனை­வ­ரும் கேட்­கும் கேள்வி­யாக உள்­ளது. தினந்­தோ­றும் உடற்­பயிற்­சிக்­கும் யோகா­வுக்­கும் சில மணி நேரங்­களை ஒதுக்­கு­கிறா­ராம். வாய்ப்­பும் நேர­மும் கிடைத்­தி­ருப்­ப­தால் வீண­டிக்­கா­மல், உடல்­நலத்­தைப் பேண இவை இரண்­டும் உதவுவ­தா­கச் சொல்­கி­றார்.

மீண்­டும் படப்­பி­டிப்­பு­கள் முழு வீச்­சில் தொடங்­கி­விட்­டால் பழைய பர­ப­ரப்­பான வாழ்க்கை திரும்­பி­விடும் என்­பதை கீர்த்தி நன்­றாக உணர்ந்­துள்­ளார். கொரோ­னா­வால் கிடைத்­துள்ள ஓய்வு நேரத்­தைப் பயன்­படுத்தி, சக கலை­ஞர்­க­ளின் பிறந்­த­நா­ளுக்கு வாழ்த்துச் சொல்­வது, உறவி­னர்­களைத் தொடர்புகொண்டு பேசி நலம் விசா­ரிப்­பது போன்­ற­வற்­றை­யும் செய்து வரு­கி­றார்.

கீர்த்­திக்கு காற்­பந்து விளை­யாட்டு ரொம்­பப் பிடிக்­கும். பார்­சி­லோனா அணி­யில் இருந்த நட்­சத்­திர வீரர் லயனல் மெஸ்­ஸி­யின் தீவிர ரசி­கை­யாம். அண்­மை­யில் அந்த அணி­யில் இருந்து மெஸ்ஸி வில­கி­ய­தால் சோகத்­தில் உள்­ளா­ராம் கீர்த்தி.

இது சற்­றும் எதிர்­பா­ராத ஒரு நிகழ்வு என்­றும் குறைந்­த­பட்­சம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளா­வது மெஸ்ஸி மீண்­டும் பார்சி­லோ­னா­க­வுக்­காக கள­மி­றங்க மாட்­டார் என்­பது வருத்­தம் அளிக்­கிறது என்­றும் தமது சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் கீர்த்தி குறிப்­பிட்­டுள்­ளார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் பார்­சி­லோனா எஃப்சி அருங்­காட்சி­யகத்­துக்குத் தாம் சென்­றி­ருந்­ததை அவர் தமது சமூக வலைத்­த­ளப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், அப்­போது எடுக்­கப்­பட்ட காணொ­ளிப் பதிவு ஒன்­றை­யும் அவர் ரசி­கர்­க­ளு­டன் பகிர்ந்து கொண்­டுள்­ளார்.

கீர்த்­தி­யின் நண்­பர்­களில் பெரும்­பா­லா­னோர் காற்­பந்து விளை­யாட்­டுப் பிரி­யர்­கள். உல­க­ள­வில் முக்­கி­ய­மாகக் கரு­தப்­படும் காற்­பந்துத் தொடர்­க­ளின் அனைத்து ஆட்டங்­க­ளை­யும் ஒன்றுவி­டா­மல் பார்த்துவிடு­வார்­க­ளாம்.

"நண்­பர்­களின் வற்­பு­றுத்­தல் கார­ண­மா­கவே நானும் காற்பந்துப் போட்­டி­க­ளைப் பார்க்­கத் தொடங்­கி­னேன். அதன் பிறகு அந்த விளை­யாட்டு எனக்­குப் பிடித்­த­மா­ன­தாக மாறி­யது.

"நான் பார்க்­கத் தொடங்­கிய நாள் முதல் இது­வரை மெஸ்­ஸி­யின் ரசி­கை­யா­கவே இருக்­கி­றேன்.

"இது இயல்­பாக நடந்த விஷ­யம். எப்­போ­துமே அமைதி காப்­ப­தும் ஆட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­து­வ­தும்­தான் அவ­ரது வழக்­கம். அது எனக்கு ரொம்­பப் பிடிக்­கும்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.