"அப்பாடா... ஒருவழியாக அறி வித்துவிட்டார்" எனப் பெருமுச்சு விடுகிறார்கள் நயன்தாராவின் தீவிர ரசிகர்கள்.
வேறொன்றும் இல்லை... விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இத்தகவலைப் போட்டு உடைத்தார் நயன்தாரா.
அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவர் டிடி என்று குறிப்பிடப்படும் திவ்யதர்ஷினி. இவரும் நயன்தாராவும் நெருக்கமான தோழிகள் என்பதை திரையுலகத்தினர் நன்கு அறிவர். மேலும் டிடியும் நயன்தாராவிடம் தமக்கு உள்ள உரிமையில் மிக இயல்பாகப் பேசுவார்.
அண்மைய நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவிடம், "நீங்கள் கையில் அணிந்திருக்கும் மோதிரம் யார் வாங்கிக் கொடுத்தது? என்று திவ்யதர்ஷினி கேள்வி எழுப்ப, அதற்கு, "இது நிச்சயதார்த்த மோதிரம். எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது," என்றார் நயன்தாரா. மொத்தத்தில், அவரது திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
, :

