அண்மைய சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அனு இம்மானுவேலின் புகைப்படங்கள் இளம் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது. அவரது அழகை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனு, 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'மகா சமுத்திரம்' படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் திடீரென கவர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளார் அனு. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடுபவர், கூடவே தனது புகைப்படங்களையும் வெளியிடுகிறார். இதனால் இன்ஸ்டகிராமில் அவரைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
வாய்ப்புக்காகத்தான் தாம் இவ்வாறு செய்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் அனு.

