'இது 30 ஆண்டு கனவு'

'இது 30 ஆண்டு கனவு'

3 mins read
0e14da76-256f-4331-ad02-bf4f4f52ce50
அரவிந்த்சாமி -

இயக்­கு­நர் ஆக வேண்­டும் எனும் தமது முப்பது ஆண்­டு­கால கனவு நிறை­வேறி உள்ளது என்­கி­றார் நடி­கர் அர­விந்த்­சாமி.

இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய நடி­கர்­களில் இவ­ரும் ஒரு­வர். அதன் மூலம் பல நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்கொண்­ட­தா­கப் பல பேட்­டி­களில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ­ரைப் போல் சித்­தார்த், கார்த்தி ஆகி­யோ­ருக்­கும் மணி­ரத்­னத்­து­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம் உண்டு.

"கடந்த 1990களின் தொடக்­கம் முதல் எனக்கு இயக்­கு­நர் ஆக வேண்­டும் எனும் கனவு இருந்­தது. படங்­களை இயக்­கு­வது மிக­வும் கௌர­வ­மான வேலை, மற்­றவை அதற்­குப் பிறகு­தான் என்று என் மன­தில் ஓர் எண்­ணம் வலு­வா­கப் பதிந்து இருந்­தது," என்­கி­றார் அர­விந்த்­சாமி.

அண்­மை­யில் மணி­ரத்­னம் தயா­ரிப்­பில் வெளி­யீடு கண்ட 'நவ­ரசா' ஆந்­தா­லஜி படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'ரவுத்திரம்' என்ற பகு­தி­யின் இயக்­கு­நர் இவர்­தான். இது­குறித்து மணி­ரத்­னம்­தான் இவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியுள்­ளார்.

"மணி சார் 'நவ­ரசா' படம் குறித்­தும் அதன் பின்­ன­ணி­யில் உள்ள நோக்­கம் குறித்­தும் முத­லில் விவ­ரித்­தார். அதன் பிறகு அந்­தப் படத்­தி­லும் அதன் பின்னணி­யில் உள்ள முயற்­சி­யிலும் நானும் பங்­கேற்க இய­லுமா என்று கேட்­டார்.

"பதி­லுக்கு நான் எந்த வகை­யில் பங்­களிக்க வேண்­டும் என்று கேட்­டேன். இயக்­கு­ந­ரா­கவோ, நடி­க­ரா­கவோ இந்­தப் படத்­தில் நான் இருக்க வேண்­டும் என்று மன­த­ள­வில் முடிவு செய்த பின்­னர் நான் எழுப்­பிய கேள்வி இது. ஆனால் எந்த வகை பங்­க­ளிப்பு என்­பதை நானே தீர்­மா­னிக்­க­லாம் என்­றார் மணி. எனக்கு முழு சுதந்­தி­ரம் அளித்த பிறகு கொஞ்­சம்­கூட தயங்­க­வில்லை.

"இயக்­கு­நராகப் பணி­யாற்­று­கி­றேன் என்­ற­போது அவர் மறுக்­க­வில்லை. இதன் மூலம் என்­னு­டைய இயக்­கு­நர் பய­ணம் தொடங்கி உள்­ளது. முப்­பது ஆண்­டு­கால கனவு எதிர்­பா­ராத ஒரு தரு­ணத்­தில் நிறை­வே­றி­யது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்­கி­றார் அர­விந்த்­சாமி.

ஒரு படைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பில் தமக்கு எந்­த­வி­த­மான சந்­தே­க­மும் தயக்­க­மும் அறவே எழ­வில்லை என்று குறிப்­பி­டு­பவர், பல ஆண்­டு­க­ளாக நான் பல திற­மை­யான இயக்­கு­நர்­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­து­தான் இதற்கு கார­ணம் என்­கி­றார்.

அவர்­கள் அனை­வ­ருமே தமக்கு வழிகாட்டி­களாக இருந்­துள்­ள­னர் என்­றும் அவர்­க­ளி­டம் இருந்து நேர­டி­யாக பல­வற்­றைக் கற்­றுக் கொண்­ட­தா­க­வும் குறிப்­பி­டு­கி­றார்.

"வாழ்க்­கை­யில் எந்­தத் தரு­ணத்­தி­லும் நாம் புதி­தாக ஏதா­வது முயற்சி செய்­ய­லாம். ஆனால் அவ்­வாறு ஏதே­னும் செய்­வ­தாக இருந்­தால், அது குறித்து யோசித்து, கவ­னித்து சில நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முயற்சி செய்ய வேண்­டும். அப்­போ­து­தான் நமக்­கான வாய்ப்­பு­கள் தேடி வரும்­போது சிறப்­பா­கச் செயல்­பட முடி­யும். அந்த வகை­யில் ஓர் இயக்­கு­ந­ராக எனது முதல் படைப்பை உரு­வாக்­கி­ய­தில் மகிழ்ச்சி.

'நவ­ரசா' படத்­தில் இடம்­பெ­ற்றுள்ள 'ரவுத்­தி­ரம்' பகுதி மனி­தர்­க­ளின் கோப உணர்வு குறித்து சித்­தி­ரிக்­கிறது. இந்­தப் பகு­தியை தாம் இயக்­கு­வ­தாக மணி­ரத்­னத்­தி­டம் கேட்­டுக்கொண்­டா­ராம்.

"இதற்கு தகுந்த கார­ணம் உள்ளது. வழக்­கத்தை மீறி ஏதா­வது செய்ய வேண்­டும் என்று நினைத்­தேன். அதற்கு கோப உணர்வை வெளிப்­ப­டுத்­தும் கதா­பாத்­தி­ரங்­களும் கதைக் க­ள­மும் இருந்­தால் நன்­றாக இருக்­கும் என்று தோன்­றி­யது. மணி­ரத்­னம் இதற்கு அனு­மதி அளித்­ததை அடுத்து, ஒரு கதையைத் தயார் செய்­தேன். நான் எதிர்­பார்த்த வகை­யில் 'ரவுத்­தி­ரம்' உரு­வா­னது மன­நி­றைவு தரு­கிறது. மேலும், அதற்­கான பாராட்­டு­களும் கிடைத்து வரு­வது மகிழ்ச்சி தரு­கிறது," என்­கி­றார் அர­விந்த்­சாமி.

இனி இயக்­கு­நர், நடி­கர் என இரு தளங்­களி­லும் பய­ணம் செய்­வதே இவ­ரது திட்­டம் என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்ளி­கள்.