நேரடியாக இணையத்தில் வெளியாகிறது 'கசடதபற'

1 mins read
68f4665a-e498-41fa-a314-8dc804a09035
-

பல கதை­களை, பகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக உரு­வா­கும் 'ஆந்­தா­லஜி' வகை திரைப்­ப­டங்­க­ளின் எண்­ணிக்கை மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது. அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள புதுப் படம் 'கச­ட­த­பற'. சிம்­பு­தே­வன் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது.

வெங்­கட்­பி­ர­பு­வும் டிரை­டண்ட் ஆர்ட்ஸ் ரவீந்­தி­ர­னும் இணைந்து தயா­ரித்­துள்­ள­னர். சந்­தீப், ஹரிஷ் கல்­யாண், பிரியா பவானி சங்­கர், ரெஜினா, சாந்­தனு, பிரேம்ஜி உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

இப்­ப­டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முன்னணி 'ஓடிடி' தளத்தில் வெளியீடு காண்கிறது.

மொத்­தம் ஐந்து கதை­க­ளைக் கொண்டு 'கச­ட­த­பற' ஆந்­தா­லஜி படத்தை உரு­வாக்கி உள்­ள­னர். ஐந்து பகு­தி­க­ளுக்­குமே தென்­சென்னை தான் கதைக்­க­ள­மாம்.

அண்­மைய சில ஆண்­டு­க­ளாக வட­சென்னை பகு­தியை மையப்­படுத்­திய கதைக்க­ளங்­க­ளில்­தான் இயக்­கு­நர்­களும் முன்­னணி நாயகர்­களும் கவ­னம் செலுத்தி வருகின்­ற­னர். இதி­ல் இ­ருந்து முற்றிலும் மாறு­பட்டு தென்சென்­னையை கதைக்­ க­ள­மாக்கி உள்­ளார் சிம்பு தேவன்.