சமந்தா: அது ஓர் அழகிய, அற்புத உலகம்

சமந்தா: அது ஓர் அழகிய, அற்புத உலகம்

1 mins read

ஊட­கங்­களில் அதி­கம் காணப்­படும் தென்­னிந்­திய நடி­கை­க­ளின் பட்டி­ய­லில் கண்ணை மூடிக்­கொண்டு சமந்­தா­வுக்கு முதல் ஐந்து இடங்­களில் ஓரி­டத்­தைக் கொடுக்­க­லாம்.

அவ­ரைப் பற்றி ஏதா­வது ஒரு தக­வல் ஊடகங்களில் வெளி­யான வண்­ணம் இருக்­கிறது.

அண்­மை­யில் சமூக வலைத்­த­ளங்­களில் பயன்­ப­டுத்­தும் தனது பெய­ரில் இருந்து தன் கண­வ­ரது பெயரை நீக்­கி­னார் சமந்தா. இதை­ய­டுத்து அவ­ரது மண வாழ்க்­கை­யில் ஏதோ பிரச்­சினை என்று தக­வல் பர­வி­யது. ஆனால் இதற்­கெல்­லாம் அவர் அலட்­டிக் கொள்­வ­தாக இல்லை.

சமந்தா நடிப்­பில் உரு­வாகி வந்த 'சாகுந்­த­லம்' படத்­தின் படப்­பி­டிப்பு முடி­வுக்கு வந்­துள்­ளது. இந்­தப் படம் தன் மன­துக்கு நெருக்­க­மான படைப்பு என்று கூறு­கி­றார். இது­தொ­டர்­பாக தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"இந்­தப் படம் என் வாழ்­நா­ளில் என்­னுடனேயே இருக்கும். சிறு வயதில் தேவ­தைக் கதைகளை அதிகம் நம்­பு­வேன். இப்­போ­தும் அது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை.

"என் கனவை நன­வாக்­கி­ய­தில் இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் குணா முக்­கி­ய­மா­ன­வர். சொல்­லப்­போ­னால் என் கனவு தேவ­தையை உரு­வாக்­கி­ய­வர்.

"அவர் இப்படத்தின் கதையை விளக்­கி­ய அந்த நொடியே அந்த அற்­புத உல­கத்­திற்­குள் நுழைந்­து­விட்­டேன், அது சாகுந்­த­லம் உல­கம். அப்­படி ஓர் உலகம் எங்­கு­மில்லை. அதை மிகவும் ரசித்தேன்.

"எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஓர் உலகத்தை இயக்குநர் படைத்து விட்டார். என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.

"இதற்காக அவருக்கு நன்றி," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.