நடிகர் விஜய்யை சந்தித்த தோனி

நடிகர் விஜய்யை சந்தித்த தோனி

1 mins read
70438435-f40d-4c42-a300-66c2667029ab
-

நடி­கர் விஜய்­யும் இந்­திய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான மகேந்­திர சிங் தோனி­யும் நேரில் சந்­தித்­துப் பேசி உள்­ள­னர். அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­படங்­கள் இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

விஜய் இப்­போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்­தின் படப்­பி­டிப்பு சென்­னை­யில் உள்ள தனி­யார் படப்­பிடிப்பு அரங்­கில் நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில் தோனி நடிக்­கும் விளம்­ப­ரப் படத்­தின் படப்­பி­டிப்­பும் அண்­மை­யில் அதே அரங்­கில் நடந்துள்­ளது.

அப்­போது விஜய் அங்கு இருக்­கி­றார் என்ற தக­வல் தோனிக்கு தெரிய வந்­துள்­ளது. ஐபி­எல் கிரிக்­கெட் தொட­ரில் சென்னை அணிக்கு தலை­மை­யேற்று வழி­நடத்­து­கி­றார் தோனி. இத­னால் அடிக்­கடி சென்­னைக்கு வந்து செல்­கி­றார்.

மேலும், தமிழ்ப் படங்­கள் பார்ப்­பது, தமி­ழக உண­வு­களை ருசிப்­பது என தமி­ழ­கத்­து­ட­னும் தமிழ் மக்­க­ளு­ட­னும் மிக­வும் நெருக்­க­மாகி­விட்­டார். விஜய் நடிக்­கும் படங்­க­ளை­யும் தவ­றா­மல் பார்ப்­பா­ராம். இருவரும் ஒரே இடத்தில் நடக்கும் படப்பிடிப்புகளில் பங்கேற்ற நிலையில், விஜய்யை தேடிச்சென்று பார்த்துள்ளார் தோனி. அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனராம். கிரிக்கெட், சினிமா குறித்து மட்டுமல்லாமல், உலக நடப்புகள், கொரோனா குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது படக்குழுவில் உள்ள சிலர் கைபேசியில் எடுத்த படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன.