ரசிகர்களுக்கு தமன்னா அறிவுரை
கொரோனா நெருக்கடியால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு உணவு விநியோகிக்கும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறார் தமன்னா. இதற்காக ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறார்.
முதன்முதலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே இந்தச் சேவையைத் தொடங்கிவிட்டாராம். இப்போது அது மேலும் விரிவடைந்துள்ளது.
இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தம்மைப் போன்று மற்றவர்களும் குறிப்பாக இளையர்கள் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"ஊரடங்கில் உணவு கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர் களுக்கு உதவுவது நம் கடமை. சத்தான உணவாலும் மன உறுதியாலும்தான் என்னால் தொற்றில் இருந்து விடுபட முடிந் தது. உணவு, தூய்மை, உடல் நலம் ஆகியவற்றில் அனை வரும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றுக்காக அல்லாடும் ஏழை மக்களுக்கு கைகொடுக்க வேண்டும்," என்கிறார் தமன்னா.
மூன்று வீடுகள்: தீவிர விவாதம்
சென்னையில் முக்கியப் பகுதிகளில் வசிக்கும் நடிகர்களில், யாருடைய வீடு விலைமதிப்பானது என ரசிகர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
நடிகர் சிவக்குமார், அவரது வாரிசுகள் சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் மிகப்பெரிய வீட்டைக் கட்டி ஒன்றாக வசித்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதுதான் அதிக விலைமதிப்பு கொண்ட வீடாகக் கருதப்பட்டது.
இதையடுத்து நடிகர் விஜய் கட்டிய பிரம்மாண்ட வீடு முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் இப்போது இவர்களை மிஞ்சியுள்ளார் தனுஷ்.
அவர் போயஸ் தோட்டப் பகுதியில் கட்டி வரும் வீட்டின் மதிப்பு ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. தவிர, வீட்டின் அளவிலும் கூட பிற நடிகர்களை அவர் முந்திவிட்டதாக சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

