மீண்டும் வில்லனாகிறார்

1 mins read
1f9a163b-d7d8-42db-a805-a6cd355af7bf
-

மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இம்முறை தெலுங்கின் முன்னணி நாயகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவுடன் திரையில் மோதப் போகிறார்.

தமிழில் முன்னணி நாயகனாக உள்ள போதிலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைக்களங்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் கூட நடிக்கத் தயார் என்கிறார் சேதுபதி.

அந்த வகையில் ஏற்கெனவே 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அந்தப் படம் வசூல் ரீதியில் அசத்தி உள்ளது.

விஜய் சேதுபதியின் நடிப்பை தெலுங்கு ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளன.

இப்போது மேலும் ஒரு வில்லன் வேடம் தேடிவந்துள்ளது. அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, "பால கிருஷ்ணா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சேதுபதி.

அப்படியானால் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக அர்த்தம்.