'தமிழில் நடிக்க ஆசை'

'தமிழில் நடிக்க ஆசை'

3 mins read
68e1c1a7-2751-4c55-950d-68157e15dc21
-

தமி­ழில் இன்­னும் அறி­மு­க­மா­க­வில்­லையே தவிர தமிழ் சினி­மா­வின் தலை­ந­க­ரான கோடம்­பாக்­கத்­தி­லும் இளை­யர்­கள் மத்­தி­யி­லும் கியாரா அத்­வானி ரொம்­பப் பிர­ப­லம்.

சினி­மா­வில் பெய­ரெ­டுக்­கும் முன்பே இணை­யத்­தொ­டர்­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­வர். கியா­ரா­வின் கவர்ச்­சி­யும் நடிப்­பும் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை கவர்ந்­த­தால், இயக்­கு­நர் சங்­க­ரின் அடுத்த படத்­தில் நாய­கி­யாக நடிக்­கும் அள­வுக்கு வளர்ந்­துள்­ளார்.

ராம் சரண் நாய­க­னாக நடிக்க, தெலுங்­கில் பிரம்­மாண்­ட­மான படைப்­பா­க­வும் பெரும் பொருட் செல­வி­லும் உரு­வா­கிறது அந்­தப் படம். ராம்­ச­ர­ணின் பதி­னைந்­தா­வது படம் என்­ப­தைக் குறிப்­பி­டும் வகை­யில் தற்­கா­லி­க­மாக '#ஆர்சி 15' (#RC15) என குறிப்­பி­டு­கின்­ற­னர். ஸ்ரீ வெங்­க­டேஸ்­வரா கிரி­யே­ஷன்ஸ் தயா­ரிக்­கிறது. அந்­நி­று­வ­னத்­தின் ஐம்­ப­தா­வது படம் என்­ப­தும் படம் குறித்த எதிர்­பார்ப்­பு­களை அதி­க­ரித்­துள்­ளது.

"இப்­ப­டிப் பல்­வேறு கவ­னிக்­கத்­தக்க அம்­சங்­க­ளைக் கொண்­டுள்ள இப்­ப­டத்­தில் நாய­கி­யாக நடிப்­பது பெரிய விஷ­யம். இதை தமி­ழி­லும் வெளி­யிட உள்­ள­னர். அதன் மூலம் தமிழ் ரசி­கர்­களை சந்­திக்­கப் போகி­றேன் என்­ப­தும் மகிழ்ச்சி அளிக்­கிறது. தமி­ழில் நடிக்க ஆர்­வ­மாக உள்­ளேன்," என்­கி­றார் கியாரா.

கடந்த ஜூலை 31ஆம் தேதி இவ­ரது பிறந்த நாள். இதை அறிந்த சங்­கர் உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர், அவ­ருக்கு வாழ்த்து தெரி­விக்­கும் வகை­யில் '#ஆர்சி 15' சார்­பாக ஒரு பிறந்­த­நாள் சுவ­ரொட்­டியை வெளி­யிட்­ட­னர்.

இயக்­கு­நர் சங்­க­ரு­டன் கியாரா அத்­வானி பேசிக்­கொண்­டி­ருக்­கும் காட்­சி­யு­டன் கூடிய அந்­தப் புகைப்­ப­டம் இன்று தென்­னிந்­திய இளை­யர்­கள் மத்­தி­யில் பர­வ­லாக வலம் வந்­து­கொண்­டி­ருக்­கிறது.

"நான் பழம்­பெ­ரும் இந்தி நடி­கர் அசோக்­கு­மா­ரின் பேத்தி. இது பல­ருக்­குத் தெரி­யாது. எனது இயற்­பெ­யர் ஆலியா. 29 வய­தா­கி­விட்­டது என்­பதை தயக்­க­மின்­றிச் சொல்­வேன். நடிகை ஜூஹி எனக்கு அத்தை முறை வேண்­டும். சல்­மான்­கான், ஸ்ரீதே­வி­யின் தீவிர ரசிகை," என்று சொல்­லும் கியாரா, தக­வல் தொடர்­புத்­து­றை­யில் பட்­டம் பெற்­ற­வர்.

'ஃபக்லி' இந்­திப் படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார். அதை­ய­டுத்து இந்­திய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வ­ரான தோனி­யின் வாழ்க்கை வர­லாற்­றைத் தழுவி எடுக்­கப்­பட்ட 'எம்.எஸ்.தோனி: தி அன் டோல்ட் ஸ்டோரி' படம் அவரை இந்­தி­யா­வின் மூலை­மு­டுக்கு வரை கொண்டு சேர்த்­தது என­லாம். அந்­தப் படத்­தில் தோனி­யின் மனைவி சாக்­‌ஷி­யின் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார் கியாரா.

"அந்­தக் கதா­பாத்­தி­ரத்­திற்கு என்ன தேவையோ அதை மட்­டுமே செய்­தேன். ஆனால் விமர்­ச­கர்­கள் என்னை மன­தா­ரப் பாராட்­டிய பிறகே நாம் ஏதோ உருப்­ப­டி­யா­கச் செய்­தி­ருக்­கி­றோம் என்ற எண்­ணம் ஏற்­பட்­டது. அதன் பிற­கும் என் மன­துக்­குத் தோன்­றிய வகை­யில் நடிக்­கி­றேன். எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­களும் வரு­கின்­றன. அவற்­றை­யும் திறந்த மன­தோடு வர­வேற்­கி­றேன்," என்­கி­றார் கியாரா.

'லஸ்ட் ஸ்டோ­ரீஸ்' என்ற இணை­யத்­தொ­ட­ரில் நடித்­த­தைத்­தான் இவ்­வாறு மறை­மு­க­மா­கக் குறிப்­பி­டு­கி­றார். அதில் குடும்ப வாழ்க்­கை­யில் போதிய மகிழ்ச்சி இன்­றித் தவிக்­கும் பெண்­ணாக கவர்ச்­சிக் காட்சி­களில் நடித்­தார் கியாரா. அவ­ரது நடிப்­பில் மிகுந்த பக்­கு­வ­மும் கச்­சி­த­மும் இருந்­த­தா­கப் பல­ரும் பாராட்­டிய அதே வேளை­யில், கடும் விமர்­ச­னங்­களும் எழுந்­தன.

"அதன் பிற­கு­தான் தெலுங்­கில் மகேஷ் பாபு­வு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. முன்­னணி கதா­நா­யகி என்­பதை நான் உண­ரும் முன்பே, ஊட­கங்­கள் அது­கு­றித்து நிறைய செய்­தி­களை வெளி­யிட்­டன.

"ராம் சர­ணு­டன் 'வினய விதேயா ராமா', 'அர்­ஜுன் ரெட்டி', இந்தி மறு­ப­திப்­பான 'கபீர் சிங்' படத்­தில் ஷாகித் கபூ­ருக்கு ஜோடி, அக்­‌ஷய் குமா­ரின் 'குட் நியூஸ்' படத்­தில் இன்­னொரு நாயகி, இந்­தி­யில் அக்­‌ஷய்­கு­மார் நடிப்­பில் ராகவா லாரன்ஸ் இயக்­கிய 'காஞ்­சனா' மறு­ப­திப்­பின் நாயகி என வரி­சை­யாக வாய்ப்­பு­கள் அமைந்­தன.

"அதன் உச்­சக் கட்­ட­மாக இப்­போது சங்­கர் இயக்­கத்­தில் நடிக்­கி­றேன் என்­ப­தும் அதன் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளைச் சந்­திக்­கி­றேன் என்­ப­தும் உற்­சா­கம் அளிக்­கிறது" என்­கி­றார் கியாரா.

இரண்டு இந்­திப் படங்­க­ளி­லும் நடித்து வரு­ப­வர், கிசு­கி­சு­க­ளைக் கண்­டு­கொள்­வதில்லை. வாரந்­தோ­றும் தனது கவர்ச்­சிப் படங்­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் மற­வா­மல் பதி­வி­டு­கி­றார். சமூ­கம் சார்ந்த விஷ­யங்­கள் தொடர்­பாக சில கருத்­து­க­ளை­யும் பதி­வி­டு­கி­றார்.

கியா­ரா­வும் இந்தி நடி­கர் சித்­தார்த் மல்­ஹோத்­ரா­வும் காதலிப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இது குறித்து பல­முறை செய்­தி­யா­ளர்­கள் கேட்­டும், எந்த தக­வ­லை­யும் கியாரா பகிர்ந்து கொண்­ட­தில்லை.