நான்கு மொழிகளில் மிரள வைக்க வருகிறது 'மாயன்'

நான்கு மொழிகளில் மிரள வைக்க வருகிறது 'மாயன்'

1 mins read
e8e0efee-953a-49d2-a28a-cd2759c66fc7
-

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்­கி­லம் ஆகிய நான்கு மொழி­களில் வெளி­யா­கிறது 'மாயன்'. பெரும் பொருட்­செ­ல­வில் பிரம்­மாண்­ட­மான திகில் படம் உரு­வாக்கி உள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லிய ஆங்­கில படத்­தி­லும் மலே­சிய தமிழ்ப் படத்­தி­லும் நடித்த வினோத் கதா­நா­ய­க­னாக நடிக்க, பிந்து மாதவி, பிரி­யங்கா மோகன் ஆகிய இரு­வ­ரும் கதா­நா­ய­கி­க­ளாக நடித்­துள்­ள­னர்.

மேலும், ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடு­க­ளம் நரேன், கே.கே.மேனன் ஆகி­யோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். கதை, திரைக்­கதை, வச­னம் எழுதி இயக்­கி­யுள்­ளார், ராஜேஷ் கண்ணா. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூ­டி­யோஸ் தயா­ரித்­துள்­ளது.

"மாயன் என்­றால் கால­பை­ர­வ­னின் பிள்ளை என்று அர்த்­தம். உல­கத்­தில் உள்ள அனைத்து உயிர்­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தும் அழிப்­ப­தும் மாயன்­கள்­தான்.

"அத்­த­கைய சக்தி கொண்ட மாயன்­க­ளுக்­கும் நம் மூதா­தை­யர்­க­ளுக்­கும் புராண காலத்­தில் நல்ல உறவு இருந்­தது. அந்த உற­வின் அடிப்­ப­டை­யில் நிகழ்ந்­த­வற்றை இப்­ப­டம் விவ­ரிக்­கும். இது­தான் அடிப்­படை கதைக்­கரு என்­றா­லும் வேறு பல அம்­சங்­களும் எதிர்­பா­ராத திருப்­பங்­களும் இருக்­கும்.," என்­கி­றார் இயக்­கு­நர் ராஜேஷ் கண்ணா.