குறைகிறது 'ஓடிடி' மவுசு

குறைகிறது 'ஓடிடி' மவுசு

3 mins read
16438628-65cf-4e9b-aa95-8a7ced3858cb
-

தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­ன­ருக்குப் பெரி­தும் நம்­பிக்­கை­யூட்­டிய 'ஓடிடி' எனப்­படும் இணைய வெளி­யீட்­டுத் தளங்­கள் மீதான நம்­பிக்கை சற்றே ஆட்­டம் கண்­டுள்­ள­தாகத் தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு வரை 'ஓடிடி'யில் படங்­களை வெளி­யி­டு­வ­தில் ஆர்­வம் காட்டி வந்த பல தயா­ரிப்­பா­ளர்­கள் இப்­போது அந்த அள­வுக்கு முயற்சி செய்­வ­தில்லை.

கார­ணம், அத்­த­கைய தளங்­களில் வெளி­யீடு கண்ட பல படங்­கள் எதிர்­பார்த்த வர­வேற்பை பெற­வில்லை என்­ப­து­தா­னாம்.

கொரோனா ஊர­டங்­கின் போது திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­ட­தால், படங்­களை வெளி­யிட முடி­யா­மல் தயா­ரிப்­பா­ளர்­கள் தவித்­த­னர். அச்­ச­ம­யம் 'ஓடிடி' தளங்­கள் புது வெளிச்­ச­மாய் கோடம்­பாக்­கத்தைச் சூழ்ந்து நம்­பிக்கை அளித்­தன.

சூர்­யா­வின் 'சூர­ரைப் போற்று' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாகி வர­வேற்பு பெற்­றது. அதன் பின்­னர் நயன்­தா­ரா­வின் 'மூக்­குத்தி' அம்­மன் தொடங்கி, யோகி­பா­பு­வின் 'மண்­டேலா' வரை பல படங்­களை 'ஓடிடி' நிறு­வ­னங்­கள் நல்ல விலை கொடுத்து வாங்­கின.

எல்­லாம் சரி­யாக நடந்து கொண்­டி­ருந்த நிலை­யில், சில முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­கள், பெரிய இயக்­கு­நர்­க­ளின் படைப்­பு­கள் 'ஓடிடி' தளங்­களில் பெரி­தாக எடு­ப­டா­மல் போன­து­தான் முதல் சறுக்­க­லாக அமைந்­தது. கடந்த ஆண்டு இணைய வெளி­யீட்­டுத் தளங்­களில் வெளி­யான பல படங்­களில் இரண்டு படங்­க­ளுக்கு மட்­டுமே பெரிய வர­வேற்பு கிடைத்­துள்­ளது. மற்ற படங்­களை வெளி­யிட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு நிலைமை சொல்­லிக்கொள்­ளும்­படி இல்லை என்­கிறது ஊட­கச் செய்தி.

அதே­போல் நடப்பு ஆண்­டில் வெளி­யான படங்­க­ளி­லும் விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­யவை தாக்­குப்­பி­டித்து நின்­ற­தா­கத் தக­வல். பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட தனுஷ் நடித்த 'ஜகமே தந்­தி­ரம்', மணி­ரத்­னம் தயா­ரித்த ஆந்­தா­லஜி பட­மான 'நவ­ரசா', நயன்­தாரா நடித்த 'நெற்­றிக்­கண்' ஆகிய படங்­க­ளின் வசூல் நில­வ­ரம் என்ன என்­பது தெரி­ய­வில்லை.

ஆனால் அவற்­றுக்கு கிடைத்த எதிர்­மறை விமர்­ச­னங்­களும் மோச­மான பின்­னூட்­டங்­களும் அவற்றை வெளி­யிட்ட தரப்­புக்கு கடும் அதிர்ச்­சியைக் கொடுத்­துள்­ள­னவாம்.

"இத­னால் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் படங்­க­ளுக்கு இருந்த மவுசு மெல்ல குறை­யத்­தொ­டங்கி உள்­ள­தா­கப் பேச்சு.

"இணை­யத்­தில் வெளி­யீடு காணும் படங்­கள் தர­மாக இல்லை என்ற கருத்து பர­வி­னால், மக்­கள் 'ஓடிடி' யில் படம் பார்க்க தயங்­கு­வார்­கள். இத­னால் அந்­நி­று­வ­னங்­கள் வாங்­கும் திரைப்­ப­டங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து, ரசி­கர்­க­ளின் கவ­னம் மீண்­டும் திரை­ய­ரங்­கு­கள் பக்­கம் திரும்­பக்­கூ­டும். அந்த வகை­யில் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­களும் பட விநி­யோ­கிப்பாளர்­களும் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்," என்று தமி­ழக ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.

'ஓடிடி' தளங்­க­ளுக்­காக திரைப்­ப­டங்­க­ளைத் தேர்வு செய்து வாங்­கும் பொறுப்­பில் உள்ள சிலர், தங்­க­ளுக்­குத் தெரிந்­த­வர்­கள், வேண்­டப்­பட்­ட­வர்­க­ளின் படங்­க­ளுக்­குத்­தான் முன்­னு­ரிமை தரு­கி­றார்­கள்," என்று தயா­ரிப்­பா­ளர்­கள் தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கிறது.

"வளர்ந்து வரும் கலை­ஞர்­களை வைத்து எடுத்த படங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு­வேளை முன்­னணி இயக்­கு­நர்­கள், நடி­கர்­கள் தயா­ரித்­தி­ருந்­தால் மட்­டும் விலை கொடுத்து வாங்­கு­கின்­றன," என்ற புலம்­ப­லும் உள்­ளது.

அதே­ச­ம­யம் சூர்யா, நயன்­தாரா போன்று நல்ல கதைக்­க­ளங்­களைத் தேர்வு செய்­யும் கலை­ஞர்­க­ளுக்கு அந்­நி­று­வ­னங்­கள் உரிய மரி­யாதை தரு­வ­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை.

"பெரிய நடி­கர்­க­ளின் படங்­கள் திரை­ய­ரங்­கில் மீண்­டும் வெளி­யீடு காணும்­போது மீண்­டும் ரசி­கர்­க­ளால் நிரம்பி வழி­யும் என்­பதே அவர்­க­ளின் நம்­பிக்­கை­யாக உள்­ளது," என்று ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அண்­மை­யில் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு கண்ட, நயன்­தா­ரா­வின் நெற்­றிக்­கண் படம் கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளது. எனி­னும் படத்தை வெளி­யிட்ட நிறு­வ­னத் தரப்பு உற்­சா­க­மாக இருப்­ப­தா­கத் தக­வல்.

, :   

நயன்தாரா