பிரபல சிங்கப்பூர் கலைஞர் ஆனந்த கண்ணன், 48 புற்றுநோய் காரணமாக, காலமானார். சிறிது காலம் நோயால் போராடிய அவர், நேற்றிரவு இயற்கை எய்தினார்.
ஆனந்த கண்ணன் மறைந்த செய்தி, சிங்கப்பூர் மற்றுமின்றி, இந்திய ரசிகர்களையும் பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரம்யா என்எஸ்கே, ஆர்ஜே தீனா, பிரீதி சஞ்சீவி உள்ளிட்ட கலைஞர்கள் சமூக ஊடகங்களில் தங்களது துயரை வெளிப்படுத்தினர்.
"இவர் எனக்கு அண்ணன், தந்தை, நல்ல நண்பர். இவரே எனக்கு எல்லாம்," என்று ரம்யா என்எஸ்கே, தமது சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்தார். "இவருடன் நான் என் மகிழ்ச்சியையும் வலியையும் பகிர்ந்தேன். என்னைக் கேட்டுக்கொண்டு எப்படி வாழ்வது, எப்படி அன்பு காட்டுவது போன்றவற்றுக்கு வழிகாட்டினார்," என்றார் அவர்.
" என்னைப் பற்றி என் அம்மா இவரிடம் முறையிடும்போது எனக்கு ஆதரவாகவே இவர் பேசுவார். எனக்காக எப்போதும் அவர் பக்கபலமாகவே இருப்பார். இந்தச் செய்தி எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. அவர் எப்போதும் மகிழ்ச்சியோடுதான் இருப்பார். என் எஸ் கே.அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்," என்று ரம்யா குறிப்பிட்டார்.
"ஆனந்த கண்ணன் சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்," இயக்குநர் வெங்கட் பிரபு தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

