இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகும் தமக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.
எனவே தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமக்கு தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் விரைவில் நலம் பெற இயலும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார் ஷெரின்.

