சிரிக்க வைக்க வருகிறது 'காசேதான் கடவுளடா'

சிரிக்க வைக்க வருகிறது 'காசேதான் கடவுளடா'

2 mins read
425de1ff-cff9-4089-adf4-eeb40908ad90
-

திரை­யில் நகைச்­சு­வை­யைக் கொண்டு வரு­வது அவ்­வ­ளவு எளி­தான விஷ­யம் அல்ல. அதற்­குப் பல்­வேறு விஷ­யங்­கள் கச்­சி­த­மாக அமைய வேண்­டும் என்­கி­றார் இயக்­கு­நர் கண்­ணன்.

ஏறத்தாழ 39 ஆண்­டு­க­ளுக்குமுன் வெளி­யீடு கண்டு தமிழ் சினிமா ரசி­கர்­களை சிரிக்­க­வும் சிந்­திக்­க­வும் தூண்­டிய 'காசே­தான் கட­வு­ளடா' படத்தை அதே தலைப்­பில் இவர் மறு­ப­திப்பு செய்­கி­றார்.

மிர்ச்சி சிவா நாய­க­னா­க­வும் பிரியா ஆனந்த் (படம்) நாய­கி­யா­க­வும் நடிக்­கின்­ற­னர். யோகி­பாபு, கரு­ணா­க­ரன், ஊர்­வசி உள்­ளிட்­டோர் முக்­கியப் பாத்­தி­ரங்­களை ஏற்க, கண்­ணன் இசை­ய­மைத்­துள்­ளார்.

படத்­தின் பெரும்­பா­லான காட்­சி­களை சென்­னைக்கு அருகே உள்ள கிழக்­குக் கடற்­க­ரை­ச் சாலையில் இருக்­கும் பெரிய பங்­க­ளா­வில் பட­மாக்கி உள்­ள­னர். மேலும், மிகப்­பெ­ரிய பாது­காப்­புப் பெட்­டக அறையை கலை இயக்­கு­நர் ராஜ்­கு­மார் அமைத்­துள்­ளார்.

"அந்­தப் பெட்­டக அறை­யில்­தான் பல கோடி ரூபாய் ரொக்­கப்­ப­ணம், தங்க நகை­கள், வைரங்­கள் என எல்­லாம் குவிந்­தி­ருப்­ப­து­போல் சித்­தி­ரித்­தி­ருக்­கி­றோம். அந்­தப் பணத்­தைக் கொள்­ளை­ய­டிக்க மூன்று பேர் திட்­ட­மி­டு­கின்­ற­னர். இது­தான் படத்­தின் முக்­கிய அம்­சம். இது நாற்­பது வய­தைக் கடந்­த­வர்­க­ளுக்­குத் தெரி­யும்.

"இன்­றைய இளை­யர்­களும் விரும்­பும் வகை­யில் படத்தை உரு­வாக்கி வரு­கி­றோம். பாது­காப்­புப் பெட்­டக அறைக்­குள் நுழைய நான்­கைந்து மறைச் சொற்கள் (பாஸ்­வேர்ட்), மிரட்டும் லேசர் கதிர்­கள் என நவீன அம்­சங்­களை வைத்­தி­ருக்­கி­றோம்," என்­கி­றார் கண்­ணன்.

பழம்­பெ­ரும் நடி­கர் தேங்­காய் சீனி­வா­சன் வேடத்­தில் யோகி­பாபு நடித்­துள்­ளார். முத­லில் நடிக்க மறுத்­த­வர், பிறகு கண்­ண­னும் சிவா­வும் வற்­பு­றுத்­திய பிறகு ஒப்­புக் கொண்­டா­ராம்.

"தேங்­காய் சீனி­வா­சன் எப்­ப­டிப்­பட்ட தர­மான நடி­கர் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அத­னால் மிக­வும் தயங்­கி­னேன். என்­னால் முடி­யும் என்று படக்­கு­ழு­வி­னர் ஊக்­கம் அளித்­த­னர்.

"மேலும், நகைச்­சு­வை­யான கதைக்­க­ளம் என்­ப­தால் நடிக்க ஒப்­புக்­கொண்­டேன். தேங்­காய் சீனி­வா­சன்போல் நடிப்­பது என்­பது பெரும் சவால். இதை நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் யோகி­பாபு.

தனக்­கான கதா­பாத்­தி­ரத்­தில் தனது முத்­தி­ரை­யும் இருக்­கும்­படி பார்த்­துக்கொள்­வா­ராம். அத­னால் தேங்­காய் சீனி­வா­சன் பாணி­யில் யோகி­யின் வழக்­க­மான நையாண்­டி­களை எதிர்­பார்க்­க­லாம் என்­கி­றார் இயக்­கு­நர்.

நாய­கன் மிர்ச்சி சிவா­வைப் பொறுத்­த­வரை வழக்­கம்­போல் அலட்­டிக்கொள்­ளா­மல் பேசு­கி­றார். 'காசே­தான் கட­வு­ளடா' போன்ற கதைக்­க­ளத்­தி்ல் நடிக்க வாய்ப்பு கிடைப்­பது அதிர்ஷ்­டம் என்­கி­றார்.

"நானும் பிரியா ஆனந்­தும் ஏற்­கெ­னவே இணைந்து நடித்­துள்­ளோம். எனவே அவ­ரு­டன் ஒரு­வித புரி­தல் உள்­ளது. நான் ஒரு காட்சிக்கு எப்­படி தயா­ரா­வேன், எப்­படி நடிப்­பேன் என்­பது அவ­ருக்கு நன்கு தெரி­யும். மேலும் எந்த காட்­சியை நான் நகைச்­சு­வை­யாக அணு­கு­கி­றேன் என்­ப­தும் அவ­ருக்கு அத்­துப்­படி.

"நகைச்­சு­வை­யைப் பொறுத்­த­வரை­யில் அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இடை­யே­யான புரி­தல் அவ­சி­யம். அசல் பதிப்­பில் நடிகை லட்­சுமி நடித்த வேடத்தை பிரியா ஏற்­றுள்­ளார். அது மிக­வும் சவா­லான கதா­பாத்­தி­ரம். பிரி­யா­வால் அதற்கு ஈடு­கொ­டுக்க முடி­யும் என நினைக்­கி­றேன். அத­னால்­தான் இயக்­கு­நர் அவ­ரைத் தேர்வு செய்­துள்­ளார்," என்­கி­றார் சிவா.

'காசே­தான் கட­வு­ளடா' என்ற தலைப்­பைக் கேட்­ட­துமே கரு­ணா­க­ரன் உற்­சா­க­மா­கி­விட்­டா­ராம். புதிய பாணி­யில் அமைக்­கப்­பட்ட திரைக்­க­தை­யும் அவ­ரைக் கவர்ந்­துள்­ளது.