பத்துப் படங்கள்: தயாராகிறார் வைகைப் புயல்

பத்துப் படங்கள்: தயாராகிறார் வைகைப் புயல்

2 mins read
a3c615b2-054f-4508-88e7-eb8bfc7c49b2
நடிகர் வடிவேலு. -

வடி­வேலு மீண்­டும் படங்­களில் நடிக்­கப்போவ­தாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்து செய்தி­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. ஆனால் எந்­தப் பட­மும் வெளி­வந்த பாடில்லை.

சில நாள்களுக்கு முன்­பு­கூட 'டிடெக்­டிவ் நேச­மணி' என்ற துப்­பறி­யும் கதை­யில் வடி­வேல் நடிக்க இருப்­ப­தாகக் கூறப்­பட்­டது. மேலும், முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டி­யை­யும் யாரோ சமூக வலைத்­த­ளங்­களில் பரவ விட்­டி­ருந்­த­னர். ஆனால் வடி­வேலு தரப்பு அது வதந்தி என உறு­திப்­ப­டுத்­தி­யது.

'ஓடிடி' தளத்­தில் அவர் நகைச்­சுவை நிகழ்ச்சியை வழி­ந­டத்­தப் போவ­தாகக் கூறப்­ப­டு­வ­தும் உறுதி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில், பிர­பல இயக்­கு­நர் சுராஜ் இயக்­கத்­தில் 'நாய் சேகர்' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்ள திரைப்­ப­டத்­தி­லும் வடி­வேலு நடிக்க உள்­ள­தாக புதுத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. இதை வடி­வேலு தரப்போ, இயக்­கு­நர் சுராஜோ இன்­னும் மறுக்­க­வில்லை.

"எனவே, இந்­தப் படம் குறித்த அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும். மேலும், குறைந்­த­பட்­சம் பத்து இயக்கு­நர்­க­ளி­டம் கதை கேட்டு, நடிக்க ஒப்புக்கொண்­டுள்­ளார் வடிவேலு.

"அவை குறித்து ஒரே நாளில் அடுத்­த­டுத்து அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்க வேண்­டும் என வடிவேலு விரும்­பு­கி­றார். அதற்­கான ஏற்­பா­டு­க­ளை­யும் அவர் செய்­துள்­ளார்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்க விவ­ரப் புள்­ளி­கள்.

இதற்­கி­டையே, 'இம்சை அர­சன் 23ஆம் புலி­கேசி' இரண்­டாம் பாகம் தொடர்­பாக தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கத்­தில் வடி­வேலுமீது புகார் அளிக்­கப்­பட்டுள்­ளது. அதற்கு தீர்வு காணா­மல் அவர் புதுப்­ப­டங்­களில் நடிக்­கக் கூடாது என அந்­தச் சங்­கம் அறி­வித்­துள்­ளது. எனவே, தயா­ரிப்­பா­ளர் சங்­கம் மூலம் தடை ஏற்­பட்­டால், தனது படங்­களை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வது என முடிவுசெய்­துள்­ளா­ராம் வடி­வேலு. இதற்கு ஒப்­புக் கொள்­ளும் இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் மட்டுமே நடிப்பாராம்.