இன்ஸ்டகிராமில் ராஷ்மிகாவைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை இருபது மில்லியனைக் கடந்துவிட்டது.
இந்த உற்சாகத்தில் மல்லிகைப் பூவைக் கொண்டு செய்த கிரீடத்தை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை அண்மையில் பதிவிட்டிருந்தார். அது இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மல்லிகைப் பூ கிரீடம் அவரது அழகை அதிகப்படுத்திக் காட்டுவதாகப் பலரும் பின்னூட்டமிட்டிருந்தனர்.
அதே வேளையில், சிலர் ராஷ்மிகாவைக் கடுமையாக விமர்சிக்கவும் தவறவில்லை. கொரோனா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இப்படிப்பட்ட படங்களும் சமூக வலைத்தளப் பதிவுகளும் தேவையா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

