தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறார் ரெஜினா

தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறார் ரெஜினா

1 mins read
8935a138-d411-47ca-b7a6-9a2868c257a0
-

ரெஜினா நடிப்­பில் உரு­வாகி உள்ள 'சூர்ப்­ப­னகை' படத்­தின் முதல் தோற்­றச்­சு­வ­ரொட்டி நேற்று வெளி­யா­னது.

இதற்கு இணை­யத்­தில் கிடைத்­துள்ள வர­வேற்பு தமக்­குப் பெரும் உற்­சா­கம் அளித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ரெஜினா.

"முதன்­மு­றை­யாக இப்­ப­டத்­தில் தொல் பொருள் ஆய்­வா­ள­ராக நடித்­துள்­ளேன். இதன் மூலம் நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்கொண்­டேன்.

"இயக்­கு­நர் கார்த்­திக் ராஜு என்­னி­டம் கதை சொன்­ன­போது காட்­சி­களை எவ்­வாறு விவ­ரித்­தாரோ, நூறு விழுக்­காடு அதே­போன்று பட­மாக்கி உள்­ளார். அதற்­காக அவ­ருக்கு நன்றி. இந்­தப் படம் எனது திரை­யு­லக வளர்ச்­சிக்கு அதிக பங்­க­ளிப்பு செய்த படைப்­பாக இருக்­கும்," என்­கி­றார் ரெஜினா.

'சூர்ப்­ப­னகை'யில் இவ­ரு­டன் அக்­‌ஷரா கவுடா, மன்­சூர் அலி­கான், ஜெயப்­பி­ர­காஷ் உள்­ளிட்ட மேலும் பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் வெளி­யாக இருக்­கிறது.

படத்­தின் பெரும்­பான்­மை­யான காட்­சி­கள், குற்­றா­லம் பகு­தி­களில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து முதல்­தோற்­றச் சுவ­ரொட்டி வெளி­யா­கி­யுள்­ளது.