தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றிருந்தார் அஜித். இதையடுத்து தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.
'வலிமை' பட வெளியீட்டுக்கும் முன்பே அவர் தேசிய போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

