விஜய் சம்பளம் இனி ரூ.120 கோடி
நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் ரஜினியை முந்தி முதலிடம் பிடித்துள்ளார் விஜய்.
'பீஸ்ட்' படத்துக்காக அவர் நூறு கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக செய்தி வெளியானது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
படம் முடிவதற்குள்ளாகவே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தின் விநியோக உரிமையைப் பெறுவதில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் விஜய் தனது சம்பளத்தை ரூ.120 கோடியாக உயர்த்தி உள்ளார்.
'தர்பார்' படத்துக்கு ரஜினி பெற்றது 108 கோடி ரூபாய் என்கிறார்கள். 'மாஸ்டர்' படத்துக்காக விஜய் பெற்றது ரூ.80 கோடியாம். இந்நிலையில் இவரது அடுத்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகி றது. இதையடுத்து தமிழுக்கு 80, தெலுங்குக்கு 40 என மொத்தமாக ரூ.120 கோடி சம்பளம் பேசப்பட்டதாகத் தகவல்.
'வானத்தில் மிதப்பதாக உணர்ந்தேன்'
"ரஜினி சார் என்னைப் பாராட்டியதுதான் என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணம்," என்கிறார் இந்துஜா. அவருடன் ஒன்றாக ஒரு புகைப்படம் எடுக்க முடியுமா என்று ஏங்கிய காலம் மறைந்து, அவர் எனது நடிப்பை பாராட்டியதை மறக்கவே இயலாது என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள் ளார். "நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. அவரது படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன். "பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த 'மெர்க்குரி' படத்தை ரஜினியும் பார்த்தார். இறுதிக்காட்சி யில் வாய் பேச முடியாமல் காது கேட்காமல் ஒருவித தவிப்பை வெளிப்படுத்தி இருப்பேன். அந்தப் பகுதி தம்மை பாதித்ததாக அவர் சொன்னார். என் நடிப்பை அனைவரது முன்னிலையில் 'அற்புதம்' என அவர் குறிப்பிட்டபோது வானத்தில் மிதந்தேன்," என்கிறார் இந்துஜா.

