நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்

நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்

1 mins read
8c41dec7-f972-4dac-937d-e3c363811538
-

சென்னை சாலி­கி­ரா­மத்­தில் வசித்­து­வந்த 'சேரன் பாண்­டி­யன்' பட நடிகை சித்ரா, 56, மார­டைப்பு கார­ண­மாக நேற்று அதிகாலை கால­மா­னார்.

1980­களில் தமிழ்ச் சினி­மா­வில் புகழ்­பெற்ற நடி­கை­யாக இருந்­த­வர் சித்ரா.

'சேரன் பாண்­டி­யன்' படத்­தின் மூல­மாக பிர­ப­ல­ம­டைந்த நடிகை சித்ரா, அதன்­பி­றகு நல்­லெண்­ணெய் விளம்­ப­ரத்­தில் நடிக்க, 'நல்­லெண்­ணெய் சித்ரா' என்­பது இவ­ரது அடைெமாழி பெயராக மாறிப்­போ­னது.

கண­வர் விஜ­ய­ரா­க­வன், மக­ள் மகா­லட்­சுமியுடன் வசித்­து­வந்த சித்ராவின் உடல், நேற்று மாலை நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்டது.

கடந்த மே 21ஆம் தேதி தனது பிறந்­த­நா­ளைக் கொண்­டாடிய சித்ரா, "21ஆம் நூற்­றாண்டு, வரு­டமும் 21, நாளும் மே 21 என்று சொல்லி சிலர் வாழ்த்­தியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்­தது,'' என விகடன் நாளி­தழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இப்­போது அதே 21ஆம் தேதியில் சித்ரா மர­ண­மடைந்­தி­ருப்­பது அவ­ரது அபிமானி க­ளி­டையே மிகுந்த கவ­லையை ஏற்­ப­டுத்­தி­ உள்ளது.

'அவள் அப்­ப­டித்­தான்' படத்­தில் கே.பால­சந்­த­ரால் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­முக­மா­ன­வர் சித்ரா. ரஜி­னி­காந்த் நடித்த 'ஊர்க்­கா­வ­லன்', 'பொண்­டாட்டி ராஜ்­ஜி­யம்' உட்­பட 300க்கும் மேலான தமிழ், மலை­யாள மொழிப்­ப­டங்­களில் நடித்­துள்­ளார் சித்ரா.

இவர் கடை­சி­யாக நடித்த 'என் சங்­கத்து ஆள அடிச்­ச­வன் எவன்டா' என்ற படம் கடந்த 2020ல் வெளி­யா­னது.