ஜோதிகாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

ஜோதிகாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

1 mins read
3e87e8a8-ba69-41ce-94d4-d473e3bb5be1
-
Google News Preferred Icon

'உடன்பிறப்பே' பட இயக்குநர் இரா.சரவணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் 'உடன்பிறப்பே' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலம் குறித்து ஆதங்கத்தோடு விழா ஒன்றில் பேசியிருந்தார். கோவில்களுக்குச் செலவழிப்பதை விட அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தவேண்டும் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜோதிகா இப்படி அதிரடியாக பேசியதன் விளைவாக, மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தியபோது பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. இப்போது அந்த மருத்துவமனை நவீன முறையில் இயங்கி வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.