'திரை வாழ்விலும் தொடர்கிறது போராட்டம்'

'திரை வாழ்விலும் தொடர்கிறது போராட்டம்'

2 mins read
e38ad34d-b2d6-4c50-9ded-d42695e543ad
-

தமிழ் சினி­மா­வில் புதிய கோணத்­தில் நடிப்பை வெளிப்­ப­டுத்தி, வித்­தி­யா­ச­மான கதை­களில் கதா­பாத்­தி­ர­மாக வாழ்ந்து, முன்­னணி நடி­கை­யாக உயர்ந்­துள்­ளார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

"கடந்த காலத்­தில் மட்­டு­மின்றி, இப்­போ­தும் தனது சினிமா வாழ்க்கை போராட்­ட­மா­கவே இருந்து வரு­கிறது," என தமி­ழக திரைச்­செய்தி ஊட­கங்­க­ளுக்கு அளித்­துள்ள நேர்­கா­ண­லில் கூறி­யுள்­ளார்.

அத்­து­டன், தான் திரைத்­து­றைக்கு வரு­வ­தற்கு முன்­பும் பின்­பும் பட்ட சிர­மங்­க­ளை­யும் அவ­மா­னங்­க­ளை­யும் அவர் மனம் திறந்து பகிர்ந்து கொண்­டுள்­ளார்.

"எனக்கு எந்த சினிமா பின்­பு­ல­மும் இல்­லா­த­தால், நான் நடி­கை­யா­வது சுல­பத்­தில் அமை­ய­வில்லை. மிக­வும் சிர­மப்­பட்­டுத்தான் ஒரு முன்­னணி நடிகை என்ற இந்த இடத்தை எட்­டிப் பிடித்­துள்­ளேன்," என்­ற­வர், தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சென்னை வீட்டு வசதி வாரி­யக் குடி­யி­ருப்­பில் வசித்­த­தா­க­வும் கூறியுள்ளார்.

"எட்டு வய­தில் தந்­தையை இழந்­தேன். படிப்­பறி­வில்­லாத எனது அம்­மா­வுக்கு இந்தி, ஆங்­கி­லம் தெரி­யாது. ஆனா­லும் மும்­பைக்­குச் சென்று புடவை­களை வாங்­கி­வந்து கொஞ்­சம் அதிக விலை வைத்து சென்­னை­யில் விற்­பனை செய்து குழந்தை­க­ளைக் காப்­பாற்­றி­னார்.

"சினி­மா­வில் நடி­கை­யாக முயற்சி செய்­த­போது எத்­தனை தடை­கள் வருமோ அத்­த­னை­யும் வந்­தது. எல்­லா­வற்­றை­யும் சமா­ளிக்க கற்­றுக்­கொண்­டேன்," என்று சொன்­னார் ஐஸ்­வர்யா.

பாலி­யல் ரீதி­யில் எனது உரு­வம், தோற்­றம், முகம், சரும நிறம் போன்­ற­வற்றை வைத்து மோச­மாக கேலி செய்­த­னர். எல்­லா­வற்­றை­யும் சகித்­துக்­கொண்டு முன்­னேற முயற்சி செய்கிறேன்.

"எனது முதல் படம் சரி­யாக ஓட­வில்லை. அதன்­பி­றகு கொஞ்­சம் கொஞ்­ச­மாக நல்ல பாத்­தி­ரங்­கள் அமைந்­தன. ஆனால், இப்­போ­தும் எனது சினிமா வாழ்க்கை போராட்­டத்­து­டன்­தான் தொடர்­கிறது," என்­கி­றார்.

கடந்த 2011ல் 'அவர்­களும் இவர்­களும்' படத்­தின் வழி தமிழ்த் திரைத்­து­றை­யில் ஐஸ்­வர்யா ராஜேஷ் அறி­மு­க­மா­னார்.

'அட்­ட­கத்தி' படம் மூலம் தமிழ் சினி­மா­வின் கவ­னத்தை பெற்றவர், 'ரம்மி', 'பண்­ணை­யா­ரும் பத்­மி­னி­யும்', 'திரு­டன் போலிஸ்' போன்ற படங்­களில் நடித்து முன்­னணி நடிகையானார்.

'காக்கா முட்டை' படத்­தின் மூலம் சிறந்த நடி­கைக்­கான தேசிய விரு­தை­யும் பெற்­றார்.

தொடர்ந்து விக்­ரம், தனுஷ், விஜய்­சே­து­பதி, சிவ­கார்த்­தி­கே­யன் உள்­ளிட்ட முன்னணி நாய­கன்­க­ளு­டன் கைகோத்து வரு­ம் ஐஸ்­வர்யா, "நான் எப்போதும் இயக்குநரின் நடிகை. அவர்கள் எழுதும் கதையை நடிப்பில் கொண்டுவர விரும்புவேன். மக்­கள் என்னை நேசிப்­ப­தில் மகிழ்ச்சி," என்­கி­றார்.

ஐஸ்­வர்யா ராஜேஷ்