சிறந்த நடிகர், நடிகையாக சூர்யா, சமந்தா தேர்வு

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் இந்­தி­யத் திரைப்­பட விழா 2021 நடைெபற்­றது. இவ்­வி­ழா­வில், சிறந்த திரைப்­ப­டம், சிறந்த நடி­க­ருக்­கான விரு­து­களை ‘சூர­ரைப் போற்று’ திரைப்­ப­டம் வென்­றுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்று பர­வா­மல் தடுக்­கும் வகை­யில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக விருது அறி­விப்பு நிகழ்ச்சி காணொளி வழி நடத்­தப்­பட்­டது.

அப்­போது, ‘சூர­ரைப் போற்று’ திரைப்­ப­டம் திரை­யிட்­டுக் காட்­டப்­பட்டு, இரு விரு­து­களை வென்­றுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நடி­கர் சூர்­யா­வுக்கு (படம்) சிறந்த இந்­திய நடி­க­ருக்­கான விரு­தும் ‘சூர­ரைப் போற்று’ திரைப்­ப­டத்­திற்கு சிறந்த படத்­துக்­கான விரு­தும் என இரு விரு­து­கள் கிடைத்­துள்­ளன.

இத­னால் உற்­சா­க­ம­டைந்­துள்ள சூர்யா ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் அதைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

“நடிப்­பின் நாய­கன் சூர்யா,” என்­றும் “நீ ஜெயிச்­சுட்ட மாறா,” என்­றும் சூர்யா ரசி­கர்­கள் ஏராளமான டுவிட்­க­ளை­யும் ‘சூர­ரைப் போற்று’ படக்காட்­சி­க­ளை­யும் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இந்­திய அள­வில் ‘ஷெர்னி’ திரைப்­ப­டத்­தில் சிறந்த நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­தற்­காக நடிகை வித்யா பால­னுக்கு சிறந்த நடி­கைக்­கான விருது அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. பாலி­வுட் ரசி­கர்­கள் வித்யா பாலனை மன­மார வாழ்த்தி வரு­கின்­ற­னர்.

இந்தத் திரைப்­ப­ட அறிவிப்பைத் தொடர்ந்து, ‘தி ஃபேமிலி மேன் 2’ இணை­யத் தொட­ரில் ஈழத்­துப் போரா­ளி­யாக சிறந்த நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­தற்காக நடிகை சமந்­தா­வுக்கு சிறந்த நடி­கைக்கான விருது அறி­விக்­கப்­பட்டு உள்ளது.

இந்த விருது அறி­விக்­கப்­பட்ட நிலை­யில், “இந்த விருது தனக்கு மிக மிக முக்கியமானது, சிறப்பானது. இயக்­கு­நர்­கள் ராஜ், டிகே ஆகியோர் என் மீது வைத்த நம்­பிக்­கைக்கு மிகப்­பெ­ரிய நன்றி,” என்­று நடிகை சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘தி ஃபேமிலி மேன் 2’ இணை­யத் தொட­ரில் நாயகனாக நடித்து அசத்­திய பாலி­வுட் நடி­கர் மனோஜ் பாஜ்­பாய்க்கு சிறந்த இணை­யத் தொடருக்கான நடி­கர் விருது அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

இதற்­கி­டையே, அடுத்­த­டுத்த நான்கு மாதங்­களில் நடி­கர் சூர்­யா­வின் சொந்த பட நிறு­வ­ன­மான 2டி என்­டர்­டெ­யின்­மெண்ட் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் நான்கு படங்­கள் நேர­டி­யாக அமே­சான் பிரைம் தளத்­தில் வெளி­யா­க உள்ளன.

‘ஜெய் பீம்’, ‘உடன்­பி­றப்பே’, ‘ஓ மை டாக்’, ‘ராமன் ஆண்­டா­லும் ராவ­ணன் ஆண்­டா­லும்’ ஆகிய படங்­கள் விரை­வில் ஒவ்­வொன்றாக வெளி­யா­கின்றன.

சூர்யா தற்­போது இயக்­கு­நர் பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில், சன் பிக்­சர்ஸ் தயா­ரிக்­கும் ‘எதற்­கும் துணிந்­த­வன்’ படத்­தில் நடித்து வரு­கி­றார். இப்­ப­டத்­தின் முதல் தோற்ற சுவ­ரொட்­டி­கள் வெளி­யாகி பெரிய வர­வேற்பைப் பெற்­றுள்­ளன.

இத­னைத்­தொ­டர்ந்து வெற்­றி­மா­றன் இயக்­கும் ‘வாடி­வா­சல்’ படத்­தில் சூர்யா நடிக்க உள்­ளார். இந்தப் படத்தை கலைப்­புலி எஸ் தாணு மிகப் பிர­மாண்­ட­மாக ரூ.200 கோடி பட்­ஜெட்­டில் தயா­ரிக்க உள்­ள­தா­க­வும் புதுத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

சூர்யா என்­ன­தான் தொடர் தோல்­விப் படங்­களைக் கொடுத்­தி­ருந்­தா­லும் அவ­ரு­டைய ஒரு வெற்றி மொத்­தத்­தை­யும் மாற்­றி­விடும் என்ற­ நம்பிக்கையில் ரூ.200 கோடியைத் திரைப்­பட தயா­ரிப்­பில் கொட்­ட­வுள்­ளா­ராம் கலைப்­புலி எஸ் தாணு.

கமல்­ஹா­ச­னைப் போன்று தான் நடிக்­கும் படங்­க­ளின் பாத்­தி­ரங்­க­ளுக்­காக கடின உழைப்பு, அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் மெனக்­கெ­டக்கூடி­ய­வர் சூர்யா. இவர் கமலை தனது திரை­யு­லக குரு என பல­முறை கூறியுள்­ளார். தற்­போது கம­லும் சூர்­யா­வும் ஒரு படத்­தில் இணைந்து நடிக்­கப் போகி­றார்­க­ளாம்.

இத­னால் இந்த இரு பெரிய நாய­கன்­க­ளை­யும் ஒன்­றா­கத் திரை­யில் பார்க்க இரு­வ­ரின் ரசி­கர்­களும் ஆர்­வ­மு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

பிர­பல மலை­யாள இயக்குநர் அமல் நீரத், அண்­மை­யில் ஏசி­யா­நெட் தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில் “கமல், சூர்­யாவை மன­தில் வைத்து புதிய கதை ஒன்றை உரு­வாக்கி வரு­கி­றேன். இதுபற்றி கமல், சூர்­யா­விடமும் கூறிவிட்டேன். அதற்கு நாயகன்கள் இருவரும் பச்சைக்கொடி காட்டிவிட்­டதால் கதை­யைத் தயார் செய்­யும் பணி­யில் துரி­த­மாக ஈடு­பட்டு வரு­கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

, :   

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!